மார்பக புற்றுநோய்: சிகிச்சை எடுத்த 15 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நோய் தாக்கும் அபாயம்?

மார்பக புற்றுநோய்: சிகிச்சை எடுத்த 15 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நோய் தாக்கும் அபாயம்?

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

மார்பக புற்றுநோய் சிகிச்சை வெற்றிகரமானதாக இருந்த போதிலும், 15 ஆண்டுகள் கழித்து அது மீண்டும் வர வாய்ப்புள்ளதாக ஒர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நிணநீர்முனைகளுக்கு பரவக்கூடிய புற்றுநோய் மற்றும் பெரிய கட்டிகள் உள்ள பெண்களுக்கு அதிகபட்சமாக மீண்டும் 40% அளவுக்கு புற்றுநோய் வரும் ஆபத்து உள்ளது.
மார்பக புற்று நோய் சிகிச்சையோடு ஹார்மோன் சிகிச்சையும் செய்யும் பட்சத்தில், மீண்டும் இந்த பாதிப்பு வரும் ஆபத்து குறையக்கூடும் என நியூ இங்கிலாந்து ஆஃப் மெடிசின் மருத்துவ சஞ்சிகையில் குறிப்பிட்டுள்ளது.
இருபது ஆண்டுகளில் 63 ஆயிரம் பெண்களின் போக்கை ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்தனர். இதில் மார்பக புற்று நோயானது அனைவருக்கும் பொதுவான வடிவத்திலேயே இருந்தது.
புற்றுநோய் உயிரணுக்கள், ஈஸ்ட்ரஜன் எனப்படும் ஹார்மோனால் கிளரப்பட்டு வளர்ந்து, பின்னர் பல இடங்களுக்கு பிரியக்கூடும் வகையாகும்.
பீரும், ஒயினும் அரை கிளாஸ் குடித்தாலும் ஆபத்து!

புற்றுநோயைக் கண்டறிய நவீன பிரா ?
ஒவ்வொருவருக்கும் மார்பக புற்றுநோய் சிகிச்சையளிக்கப்படும் போது வழங்கப்படும் டேமாக்சிஃபின் அல்லது அரோமடேஸ் தடுப்பான்கள் ஈஸ்ட்ரஜனின் விளைவுகளை தடுக்கும் அல்லது முழுமையாக நிறுத்திவிடும்.
சிகிச்சை பெற்று 5 ஆண்டுகள் ஆன பிறகு அவர்களது புற்றுநோய் மறைந்துவிட்டாலும், அடுத்த 15 ஆண்டுகளில், நிலையான எண்ணிக்கை உடைய பெண்களுக்கு உடம்பில் மீண்டும் புற்றுநோய் படர்ந்திருப்பது கண்டறியப்பட்டது – சிலருக்கு 20 ஆண்டுகள் கழித்தும் கூட கண்டறியப்பட்டது.
முதன்முதலில் ஏற்கனவே இருந்த புற்றுநோயானது நான்கிற்கும் மேற்பட்ட நிணநீர் முனைகளுக்கு பரவியிருந்த பெண்களுக்கு, அடுத்த 15 ஆண்டுகளில் மீண்டும் புற்றுநோய் வரும் அபாயம் அதிகளவில் இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

சிறிய அல்லது குறைந்த அளவிலான புற்றுநோய், நிணநீர் முனைகளுக்கு பரவாமல் இருந்த பெண்களுக்கு மீண்டும் நோய் வர 10 சதவீத அபாயம் மட்டுமே இருக்கக்கூடும்.

மார்பகப் புற்றுநோயின் 12 அறிகுறிகள்
குறிப்பிடத்தக்க விஷயம்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் முதன்மை ஆராய்ச்சியாளரான டாக்டர் ஹோங்சோ பான் கூறுகையில்,” நீண்ட காலங்கள் இருக்கக்கூடும் மார்பக புற்றுநோய் பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பரவும் என்ற இந்த குறிப்பிடத்தக்க விஷயமானது, முதலில் இருந்த புற்றுநோயின் அளவு, அது நிணநீர் முனைகளுக்கு பரவி இருந்ததா இல்லையா என்பதை பொருத்தே இருக்கும்” என்றார்.
சிகிச்சை நிறுத்திய பின் ஐந்தாண்டுகளுக்கு டேமாக்சிஃபின் வழங்கப்படும் போது மூன்றில் ஒரு பகுதி பெண்களுக்கு மீண்டும் புற்றுநோய் வரும் அபாயம் குறைவதாக மருத்துவர்களால் அறியப்பட்டுள்ளது.
புற்றுநோய் சிகிச்சை முடிந்து, பத்து ஆண்டுகளுக்கு ஹார்மோன் சிகிச்சை எடுத்துக் கொண்டால் பயனுள்ளதாக இருக்கும் என்றும் மீண்டும் இந்த நோய் அல்லது இதனால் மரணம் நிகழ்வதை தவிர்க்க முடியும் என சமீபத்திய ஆய்வு பரிந்துரைத்துள்ளது.

Previous திகில் வீடு': வலைதளங்களை பயன்படுத்தி தொடர் கொலைகள்!
Next சுவாச சோதனை மூலம் மலேரியா நோய் பாதிப்பை கண்டறியலாம்!

You might also like

Technology

முதன் முதலில் விண்வௌிக்குச் சென்ற பூனைக்கு பிரான்ஸில் சிலை

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கமுதன் முறையாக விண்வெளிக்கு சென்ற பெருமையை பெற்ற பூனைக்கு பிரான்ஸில் வெண்கல சிலை அமைக்கப்படவுள்ளது. கடந்த 1963 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் திகதி ‘வெரோனிக் ஏஜிஐ’ என்ற ரொக்கெட் மூலம் பூனை ஒன்று

Technology

சுவாச சோதனை மூலம் மலேரியா நோய் பாதிப்பை கண்டறியலாம்!

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கஅமெரிக்க விஞ்ஞானிகளின் கூற்றுபடி, தனித்துவப்பட்ட ‘சுவாச சோதனை’ நடத்தப்படுவதன் மூலம் மக்களிடம் மலேரியா நோய் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய முடியும் என தெரியவந்துள்ளது. இதற்கான ஒரு ஒழுங்கற்ற முன்மாதிரி மூச்சு சோதனை முயற்சி ஏற்கனவே

Technology

ஐபோன் எக்ஸ் வடிவமைப்பில், அதேசமயம் மலிவான விலைக்கு 3 ஐபோன்கள்.!

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்ககேஜிஐ (KGI) ஆய்வாளர் ஆன மிங்-சி கோவ் கணிப்பின் பிடி சுமார் 22 மில்லியன் ஐபோன் எக்ஸ் பதிப்புகளை, ஆப்பிள் நிறுவனம் விற்க முடிவு செய்துள்ளது. அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் அடுத்த ஆண்டு மேலும் பல ஐபோன்