ஐபோன் எக்ஸ் வடிவமைப்பில், அதேசமயம் மலிவான விலைக்கு 3 ஐபோன்கள்.!

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

கேஜிஐ (KGI) ஆய்வாளர் ஆன மிங்-சி கோவ் கணிப்பின் பிடி சுமார் 22 மில்லியன் ஐபோன் எக்ஸ் பதிப்புகளை, ஆப்பிள் நிறுவனம் விற்க முடிவு செய்துள்ளது. அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் அடுத்த ஆண்டு மேலும் பல ஐபோன் எக்ஸ் சாதனங்கள் வெளியாகும் என்ற தகவலின் மீதும் மிங்-சி கோவ் வெளிச்சம் பாய்ச்சியுள்ளார். அவர் கூற்றின்படி, ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே அதன் அடுத்த ஆண்டு ஐபோன்கள் சார்ந்த பணிகளில் ஈடுபட தொடங்கிவிட்டது. மற்றும் அவற்றின் கணிப்புகள் படி எதிர்வரும் ஆண்டில், ஆப்பிள் நிறுவனம் மொத்தம் மூன்று ஐபோன்களை அறிவிக்கும். அதில் ஒன்று ஐபோன் எக்ஸ் பிளஸ் சாதனமாக இருக்குமென்றும் கூறியுள்ளார்.

கூறப்படும் அனைத்து ஐபோன்களுமே ஓஎல்இடி டிஸ்ப்ளேடன் இணைக்கப்படும் ( தற்போதைய ஐபோன் எக்ஸ்வை போன்று) என்று முன்னர் கூறிய கோவ், தற்போது அட்டவணையுடன் வரப்போகும் கருவிகளின் சில கூடுதல் விவரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

முன்பக்க ட்ரூடெப்த் கேமரா அமைப்பு
கோவ் கூற்றின்படி, 2018-ல் வெளியாகும் ஐபோன்கள், தற்போது வெளியாகியுள்ள ஐபோன் எக்ஸைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கிறார். அதாவது அவைகள் அனைத்துமே பெஸல்லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பை பெறப்போகின்றன. மேலும் அனைத்து 2018 ஐபோன்களுமே, ஐபோன் எக்ஸ் போன்றே முன்பக்க ட்ரூடெப்த் கேமரா அமைப்பும் கொண்டு வர அதிக வாய்ப்புள்ளது.

மொத்தம் மூன்று ஐபோன்கள்
ஆப்பிள் நிறுவனம் வருகிற 2018-ல் அறிவிக்கும் மூன்று ஐபோன்களில் ஒன்று, 5.8 இன்ச் டிஸ்ப்ளே (458 பிக்ஸல் தீர்மானம்) கொண்டதாக இருக்கும். இரண்டாவது ஐபோன் ஆனது 1125×2436 என்ற தீர்மானம் கொண்ட ஒரு 6.5 இன்ச் டிஸ்பிளே கொண்டிருக்கும் மற்றும் மூன்றாவது ஐபோன் ஆனது 6.1 அங்குல திரை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓஎல்இடி டிஸ்பிளே
முன்னர் வெளியான மேக் வதந்திகளின்படி, 6.1 மற்றும் 6.5 அங்குல ஐபோன்கள் ஓஎல்இடி டிஸ்பிளே கொண்டு வரும்; மறுபுறம், 5.8 அங்குல ஐபோன் ஆனது டிஎப்டி-எல்சிடி டிஸ்பிளே கொண்டு வரும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஓஎல்இடி டிஸ்பிளே ஐபோன்கள் உயர் இறுதியில் சந்தையை இலக்காகவும், டிஎப்டி-எல்சிடி டிஸ்பிளே கருவியானது மிட்ரேஞ்ச் சந்தையை குறிவைத்தும் களமிறங்கலாம்.

மலிவான விலையில் கிடைக்கும். மிங்-சி கோவ் வதந்திகளின்படி சென்றால், 6.5 அங்குல ஐபோன் ஆனது தற்காலிகமாக ஐபோன் எக்ஸ் பிளஸ் என்று அழைக்கப்படும். மறுபுறம், 6.1 அங்குல எல்சிடி மாடலானது ஐபோன் எக்ஸ் வடிவமைப்பை கொண்டு வரும், இருப்பினும் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும்.

கண்ணாடி மற்றும் எஃகு வடிவமைப்பு 5.8 அங்குல ஐபோன் அனைத்து கண்ணாடி மற்றும் எஃகு வடிவமைப்பு கொண்டு வரும். இருப்பினும், இந்த ஐபோன் மாடல் டச் ஐடி, டி.டி சென்சிங் மற்றும் இன்னும் சில அம்சங்கள் போன்ற அம்சங்களை உள்ளடக்குவதில்லை என்றும் கோவ் வியப்புடன் குறிப்பிடுகிறார்.

Previous Phone call from Balaji's fan
Next சிம்பு தன் உடல் எடையில் இன்னும் எத்தனை கிலோவை குறைக்கவுள்ளார் தெரியுமா?

You might also like

Technology

சுவாச சோதனை மூலம் மலேரியா நோய் பாதிப்பை கண்டறியலாம்!

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கஅமெரிக்க விஞ்ஞானிகளின் கூற்றுபடி, தனித்துவப்பட்ட ‘சுவாச சோதனை’ நடத்தப்படுவதன் மூலம் மக்களிடம் மலேரியா நோய் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய முடியும் என தெரியவந்துள்ளது. இதற்கான ஒரு ஒழுங்கற்ற முன்மாதிரி மூச்சு சோதனை முயற்சி ஏற்கனவே

Technology

முதன் முதலில் விண்வௌிக்குச் சென்ற பூனைக்கு பிரான்ஸில் சிலை

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கமுதன் முறையாக விண்வெளிக்கு சென்ற பெருமையை பெற்ற பூனைக்கு பிரான்ஸில் வெண்கல சிலை அமைக்கப்படவுள்ளது. கடந்த 1963 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் திகதி ‘வெரோனிக் ஏஜிஐ’ என்ற ரொக்கெட் மூலம் பூனை ஒன்று

Technology

மார்பக புற்றுநோய்: சிகிச்சை எடுத்த 15 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நோய் தாக்கும் அபாயம்?

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கமார்பக புற்றுநோய் சிகிச்சை வெற்றிகரமானதாக இருந்த போதிலும், 15 ஆண்டுகள் கழித்து அது மீண்டும் வர வாய்ப்புள்ளதாக ஒர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. நிணநீர்முனைகளுக்கு பரவக்கூடிய புற்றுநோய் மற்றும் பெரிய கட்டிகள் உள்ள பெண்களுக்கு அதிகபட்சமாக