தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5-ஆவது ஒரு நாள் போட்டி… முதல் முறையாக வென்றது இந்தியா

48

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இன்று நடைபெற்ற 5-ஆவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 73 ரன்கள் வித்தியாசத்தில் தொடரை வென்றது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் நடந்தது. இதில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்த நிலையில் இந்தியா 274 ரன்களை குவித்தது. 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து இந்தியா 274 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 275 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்திய வீரர் ரோஹித் சர்மா 107 பந்துகளில் 115 ரன்களை அடித்தார். விராத் கோஹ்லியும், தவானும் முறையே 36, 34 ரன்களை குவித்தனர். பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்களை பெற்று இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்தது. 5-ஆவது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 4-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றது. தென்னாப்பிரிக்காவில் முதல்முறையாக இந்தியா ஒரு நாள் தொடரை வென்றது. இறுதி போட்டி, அதாவது 6-ஆவது ஒரு நாள் போட்டி வரும் பிப்ரவரி 16-ஆம் தேதி சென்சூரியனில் நடக்கிறது

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...