சொந்த மண்ணில் ஆறுதல் வெற்றியை நோக்கி தென்னாபிரிக்கா!

40

இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஆறாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.

செஞ்சுரியனில் நடைபெறவுள்ள இப்போட்டியில் இந்திய அணிக்கு விராட் கோஹ்லியும், தென்னாபிரிக்க அணிக்கு எய்டின் மார்க்கமும் தலைமை தாங்குகின்றனர்.

இப்போட்டியியை பொறுத்த வரை இரு அணிகளுக்கும் அழுத்தம் இல்லாத போட்டியாகவே பார்க்கப்படுகின்றது.

ஆறு போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி நான்கு போட்டிகளை வெற்றிக்கொண்டு தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதில் ஒருபோட்டியில் தென்னாபிரிக்கா வெற்றிபெற்றுள்ளது.

ஆகையால், இப்போட்டியில் இரு அணியும் சாதரண வெற்றியை நோக்கியே களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...