இந்த 10 பழக்கவழக்கங்கள் உங்களை என்றும் இளமையாக வைக்கும்…!

23

உங்கள் இருபதின் இளமையை உங்கள் வாழ்நாள் முழுவதும் கொண்டு வர விரும்புகிறீர்களா? வயதாவது என்பது ஒரு இயற்கையான விஷயம். ஆனால் சீக்கிரம் வயதாவதை நம்மால் தடுக்க முடியும். நாங்கள் கூறும் சில டிப்ஸ்கள் உங்கள் வயது முதிர்ச்சியை தள்ளி வைக்கும். உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக மாற்றும்.

நமது 20 வயதில் எல்லாரும் அழகாக ஜொலித்து இருப்போம். ஆனால் இருபதைக் கடக்க ஆரம்பித்ததும் நமது சருமத்திற்கு என்று தனி பராமரிப்பு தேவைப்படுகிறது. போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும், நல்ல தூக்கம் வேண்டும் இதை மாதிரி சில பழக்கவழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டியிருக்கிறது.

வயதாகுவதற்கான அறிகுறிகள் தென்பட்டதும் நிறைய ஆன்டி-ஏஜிங் பொருட்கள் வாங்கி பயன்படுத்த ஆரம்பித்து விடுவோம். இது முற்றிலும் தவறு. நமது 20 வயதை அடைந்த உடனே அதாவது வயதாகுவதற்கு முன்னரே இந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும். நாங்கள் கூறும் சில அறிவுரைகளை உங்கள் பியூட்டி முறைகளில் செய்து வந்தால் உங்கள் 20 வயதிலிருந்தே வயதாகுவதை எளிதாக தடுக்க முடியும்.

மேக்கப்பை நீக்குங்கள்

படுப்பதற்கு முன் உங்கள் மேக்கப்பை ரீமுவ் செய்து விடுங்கள். அப்பொழுது தான் நீங்கள் தூங்கும் போது உங்கள் சருமம் சுவாசிக்க முடியும். எனவே உங்கள் மேக்கப்பை ரீமுவ் செய்வது நீங்கள் எதிர்கால இளமையை தக்க வைக்க உதவும். எனவே எப்பொழுது வீட்டிற்கு போனாலும் முதலில் மேக்கப்பை கலைத்து விடுங்கள். மைக்செலர் தண்ணீர் பாட்டில், காட்டன் பஞ்சு போன்றவற்றை கொண்டு மேக்கப்பை நீக்குங்கள் . நீங்கள் சேம்பேறித்தனம் வாய்ந்தவராக இருந்தால் உங்கள் படுக்கைக்கு அருகிலேயே பேபி வைப்ஸ் அல்லது மேக்கப் ரீமுவரை வைத்து கொள்ளுங்கள்.

நன்றாக சுத்தம் செய்யுங்கள்

உங்கள் சரும வகையை அறிந்து கொண்டு அதன் படி சுத்தம் செய்யுங்கள். சிலருக்கு எண்ணெய் பசை இருந்தாலும் ஒரு முறை கழுவினால் போதும். ஆனால் உங்களுக்கு போகவில்லை என்றால் இரண்டு முறை கழுவி சுத்தம் செய்யுங்கள். உங்கள் சருமத்தின் தன்மையை அறிந்து செயல்படுங்கள். முகத்தை கழுவதற்கு சோப்பு பயன்படுத்தாதீர்கள். சோப்பு உங்கள் முகத்தில் உள்ள இயற்கையான எண்ணெய் பசை மற்றும் ஈரப்பதத்தை உறிஞ்சி வறட்சியாக காட்டும். எனவே சோப்பு இல்லாத கிளீன்ஸரை பயன்படுத்துங்கள்.

சீரம் பயன்படுத்துங்கள்

கொரியன் மற்றும் ஆசிய பெண்கள் அழகாக இருக்க காரணம் அவர்கள் சீரம் பயன்படுத்துகின்றனர். சீரம் பயன்படுத்துவதற்கு முன்னால் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துங்கள். சீரம் பயன்படுத்திய பின் கழுவுங்கள் மற்றும் போனிங் செய்யுங்கள். இவை உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கும். சில வகை சீரங்கள் முதுமைக் கோடுகள், சரும துளைகள், முகப்பருக்கள் போன்றவற்றை போக்க பயன்படுகிறது.

ஐ-க்ரீம் கண்டிப்பாக தேவை

ஐ-க்ரீம் அதிகமான விலையாக இருக்கலாம். ஆனால் இந்த ஒன்று கண்டிப்பாக தேவை. கண்களுக்கு கீழே உள்ள பகுதி தான் மிகவும் வறண்ட பகுதி. இவை தான் வயதானதற்கான முதல் அறிகுறிகளை காட்டும் எனவே இதை பராமரிப்பது முக்கியம். ஐ க்ரீம்மை பகல் மற்றும் இரவு நேரங்களில் தடவிக் கொள்ள வேண்டும். இதனால் உங்கள் கண்களை சுற்றிலுள்ள சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

ரெட்டினால் பியூட்டி பொருட்களைப் பயன்படுத்துங்கள்

ரெட்டினால் என்பது விட்டமின் ஏ அடங்கிய ஆன்டி-ஏஜிங் பொருட்கள் ஆகும். இந்த ஒரு பொருளே உங்கள் வயதாவதன் அறிகுறிகளை தடுக்க சிறந்தது. இவை சருமத்தின் ஆரோக்கியத்திற்கு காரணமான கொலாஜன் உடைவதை தடுக்கிறது. இளமையாக இருக்கும் போதும் இதை பயன்படுத்தலாம். எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இவை உங்கள் சருமத்தின் தன்மையைக் காக்கிறது மற்றும் சூரிய ஒளியால் ஏற்படும் சரும பாதிப்புகளை சரிசெய்கிறது.

தொடர்ச்சியான பேஷியல் செய்யுங்கள்

பேஷியல் போன்றவற்றை சரியான இடைவெளியில் தொடர்ந்து செய்யுங்கள். இந்த பேஷியல் முறை எந்த வித வலியையும் ஏற்படுத்துவதில்லை. எனவே இதை தொடர்ந்து செய்யுங்கள். இதனால் உங்கள் சருமம் இளமைத் தன்மையை தக்க வைக்கும்.

மிதமான எக்ஸ்போலிண்ட் பயன்படுத்துங்கள்

நமது தினசரி வாழ்நாளில் நமது சருமத்தில் ஏராளமான செல்கள் இறக்கின்றன. எனவே இந்த இறந்த செல்களை நீக்க வேண்டும். எனவே இதற்கு மைல்டு எக்ஸ்போலிண்ட் பயன்படுத்துங்கள். அதீத வீரியமான க்ரீம்களை பயன்படுத்தாதீர்கள். அது உங்கள் சருமத்தை பாதிப்படையச் செய்து விடும். கிளைக்காலிக் ஆசிட் பீல்ஸ் பயன்படுத்துங்கள். இவைகள் டிஸ்யூ மாதிரியான வடிவத்திலும் கிடைக்கிறது. எனவே இதை தினமும் பயன்படுத்தி கொள்ளலாம்.

மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள்

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மாய்ஸ்சரைசர் பயன்படுத்த கூடாது என்பது பொய். எல்லா வகை சருமம் உடையவர்களும் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம். ஜெல் வகை மாய்ஸ்சரைசர் மற்றும் ஹையலூரோனிக் அமிலம் உள்ள மாய்ஸ்சரைசர் எல்லா சரும வைக்கும் ஏற்றது. இந்த அமிலத்தில் நிறைய ஆன்டி ஏஜிங் நன்மைகள் இருக்கின்றன. நீங்கள் ரெட்டினால் வாங்க பயப்பட்டால் இது சிறந்தது.

சன் க்ரீன் பயன்படுத்துங்கள்

இந்த பழக்கத்தை அதிகமாக நாம பின்பற்ற மாட்டோம். ஆனால் இது ரெம்ப முக்கியமான ஒரு விஷயம். சரும புற்று நோய், கரும்புள்ளிகள், ஹைபர் பிக்மன்டேஷன் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க சன் க்ரீன் பயன்படுகிறது. மேலும் சருமம் வயதாகுவதையும் தள்ளி வைக்கிறது. எனவே இந்த பழக்கத்தை பின்பற்றாமல் இருக்காதீர்கள்.

பருக்கள் போன்றவற்றை பிடுங்காதீர்கள்

பருக்கள், மருக்கள் போன்றவை வந்தால் தயவு செய்து பிடுங்காதீர்கள். அது பிறகு பெரிதாகி அசிங்கமாக வெளியே தெரிய ஆரம்பித்து விடும். இதனால் இரத்தம் போன்றவை வந்து தீவிர சரும பிரச்சினைகளை கூட ஏற்படுத்தி விடும். உங்கள் முகத்தில் பருக்கள் போன்றவை இருப்பதை விரும்ப மாட்டீர்கள் தான். ஆனால் அதை பிய்த்தால் சரும பிரச்சினைகள் அதிகமாகுமே தவிர குணமாகாது. எனவே அவைகள் குணமாக கொஞ்சம் நேரம் கொடுங்கள். இதனால் உங்கள் சருமமும் மாசு மருவற்று காணப்படும்.

என்னங்க இந்த டிப்ஸ்களை பயன்படுத்தி உங்கள் இளமையை நீண்ட காலத்திற்கு தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...