மாம்பழ சட்னி : பெங்காலி ஸ்பெஷல் ரெசிபி!!

9

மாம்பழத்தை பிடிக்காதவர்கள் யாராவது இருக்காங்களா? வீட்ல நிறைய மாம்பழங்கள் ஸ்டாக் இருக்கும். எத்தனை சாப்பிட்டாமல் தீராத ஆசை, அலுக்காத சுவை மாம்பழத்திற்கு உண்டு.

சில மாம்பழங்கள் லேசான புளிப்புத் தமையுடன் இருக்கும். அவற்றை சாப்பிடவும் முடியாது என்ன செய்யலாம் என யோசிப்பீர்களா? அப்படியென்றால் வாங்க அதில் பெங்காலி ஸ்பெஷலான மாம்பழ சட்னி செய்யலாம்.

தேவையானவை :

மாம்பழம் – 2

கடுகு – தாளிக்க

வர மிளகாய்-2

வறுத்த சீரகப் பொடி- 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் – சிறிதளவு

சர்க்கரை- கால் கப்

நல்லெண்ணெய் – சிறிது

உப்பு – தேவையான அளவு

நீர் – 1 கப்

செய்முறை :

-முதலில் மாம்பழத்தை சிறிய தூண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.

-அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெயை சிறிது ஊற்றவும்.

-கடுகு தாளித்து,வரமிளகாயை அதில் சேர்க்கவும்.

-பின் மாம்பழத்துண்டுகளை அவ்ற்றில் சேர்த்து வதக்கி மூடி வைத்திருங்கள்.

-5 நிமிடம் கழித்து மாம்பழம் வெந்து கனிந்திருந்தால் அதனை நன்றாக மசித்து அதில் சீரகப் பொடி, உப்பு மற்றும் சர்க்கரையை சேருங்கள்.

-அவற்றுடன் தேவையான அளவு நீர் சேர்த்து கொஞ்சம் சுண்ட வையுங்கள்.பின் இறக்கி தேவைப்பட்டால் முந்தி திராட்சையுடன் அலங்கரிக்கலாம். *

-இப்போது சுவையான மாம்பழ சட்னி ரெடி. இதனை வடை போண்டா அல்லது தோசைகளுடன் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு :

சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்துக் கொண்டால் சுவை இன்னும் கூடுதலாக கிடைக்கும். ருசியும் அபாரமாக இருக்கும்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...