வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்

43

மெல்போர்ன்: உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் அசத்திய இந்திய வீராங்கனை அருணா ரெட்டி, வெண்கலம் வென்று வரலாறு படைத்தார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி நடக்கிறது. பெண்களுக்கான ‘வால்ட்’ பிரிவில் இந்தியாவின் அருணா ரெட்டி பங்கேற்றார். பைனலில் துடிப்பாக செயல்பட்ட இவர் 13.649 புள்ளிகள் பெற்று, மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.

இதன் மூலம், உலக கோப்பை தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்திய நட்சத்திரம் என்ற வரலாறு படைத்தார். தங்கம், வெள்ளி முறையே சுலோவேனியாவின் டிஜாசா, ஆஸ்திரேலியாவின் எமிலி பெற்றனர். மற்றொரு இந்திய வீராங்கனை பிரனீத் நாயக் 6வது இடம் பிடித்தார்.

கடந்த ரியோ ஒலிம்பிக்கில் (2016) பைனலில் பங்கேற்ற இந்திய வீராங்கனை தீபா கர்மாகர், நுாலிழையில் பதக்க வாய்ப்பை பறிகொடுத்தார். தற்போது, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அருணா முதல் முறையாக உலக அரங்கில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...