‘டுவென்டி-20’ கோப்பை வென்றது இந்திய பெண்கள் அணி

44

கேப்டவுன்:தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஐந்தாவது ‘டுவென்டி-20’ போட்டியில், இந்திய பெண்கள் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, 3-1 என, தொடரை வென்றது. தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய பெண்கள் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டுவென்டி-20’ தொடரில் பங்கேற்றது. இரு அணிகள் மோதிய ஐந்தாவது முற்றும் கடைசி ‘டுவென்டி-20’ போட்டி, கேப்டவுனில் நடந்தது.

‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி, பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணி, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி, 18 ஒவரில், 112 ரன்னுக்கு சுருண்டது. 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3-1 என, ‘டுவென்டி-20’ தொடரை கைப்பற்றியது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...