Take a fresh look at your lifestyle.

ஆபாசப் படங்கள் தான் ஓரினச் சேர்க்கையைத் தூண்டுகின்றனவா?

வணக்கம், வந்தனம் நமஸ்காரம் மக்களே.. ஒரு காரசாரமான அலசல், பதிவினைப் படித்து விட்டு உங்கள் கருத்துக்களையும் முன் வைக்கலாமே… மனித மனங்களில் உள்ள உணர்வுகளிற்கு நாம் கடிவாளம் போட்டு, அவ் உணர்வுகளைக் கட்டி வைக்க நினைக்கின்ற போது ஏற்படுகின்ற விளைவுகள் பற்றி நீங்கள் யாவரும் அறிவீர்கள். எம் உணர்வுகளை அடக்கி வாழப் பழகிக் கொள்ளும் போது, எம்மையறியாமலே நாம் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகின்றோம். மனிதனது உணர்வுகள் இயற்கையின் நியதிக்கமைவாகத் தூண்டப்பட்டாலும், ஒரு சில வேளைகளில் தவறான வழிகளும் மனித உணர்வுகளைத் தூண்டுகின்ற காரணிகளாக மாறி விடுகின்றன.

பாலியல், ஓரினச் சேர்கை எம் தமிழ்ச் சமூகத்தில் ஒரு வித்தியாசமான சிந்தனை உள்ளது. எவருமே இன்று வரை சரியான புரிதலுடன் மூன்றாம் பாலின மனிதர்களையோ அல்லது ஓரினச் சேர்க்கையாளர்களையோ அடையாளம் கண்டு கொள்வதில்லை. இவர்கள் பற்றிப் பேச்சு வந்தாலே எம் சமூகத்தின் சாபக் கேடு இவர்கள் என்று மூஞ்சில காரி உமிழாத குறையா திட்டித் தீர்க்கிறோம். ஏன் அண்மையில் “கனடாவில் ஓரினச் சேர்க்கையாளர்களாக ஒரு பெண் ஜோடி திருமணம் செய்து கொண்டார்கள்’ எனும் நிகழ்வினை எமது பக்கத்தில் செய்திகாகப் பதிவிட்டிருந்தோம். விளைவு, குறித்த அச் செய்தியின் கீழ் பலரும் ஓடி வந்து முகம் சுழிக்கும் வகையில் தம் பின்னூட்டங்களை, மன வெறியினை, அறியாமையினைக் கொட்டித் தீர்த்திருந்தார்கள்.

உண்மையில் இந்த இடத்தில் குறித்த அந்த ஓரினச் சேர்க்கையாளர்களே உயர்வான மனிதர்களாக நம் கண்ணுக்குத் தெரிகிறார்கள். அவர்களை வித்தியாசமான கோணத்தில் நோக்கும் நாம் தான் மிகவும் தாழ்வு மனம் உடையவர்களாக தென்படுகின்றோம். இதற்கான காரணம் புரிந்துணர்வு, பாலியல் பற்றிய போதிய அறிவு, எதிர்பார்ப்பாலார் பற்றிய விழிப்புணர்வு இல்லாமையே ஆகும். நான் இக் கருத்துக்களிற்கு விளக்கத்தினைக் கொடுக்கும் வகையிலும், பாலியல் படங்கள் எம் சமூகத்தில் அறிமுகமாகுவதற்கு முன்பதாகவே தமிழனின் பாலியல் உணர்வுகள் தூண்டப்பட்டிருக்கின்றன என்பதனை விளக்கும் வகையில் ஒரு சில கருத்துக்களை முன் வைக்கலாம் என்றிருக்கின்றேன். இதனைப் படிக்கும் நீங்களும் மிகவும் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துக்களை முன் வைக்கலாம்.

இங்கே நான் கலாச்சாரத்தின் சிறப்பிற்குரிய பூமியாகப் பலராலும் பல ஆண்டுகளுக்கு முன்பதாக வர்ணிக்கப்படும் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தினையும், வன்னிப் பகுதியினையும் முன் நிறுத்தி என் கருத்துக்களை உதாரண விளக்கத்தோடு வைக்கின்றேன். ஆபாசப் படங்கள் பாலியல் உணர்வுகளிற்குத் தூண்டுகோலாக அமைந்தாலும், ஓரினச் சேர்க்கையினைத் தூண்டுவது ஆபாசப் படங்கள் எனும் கருத்தினைப் பொய்ப் பிக்கும் வகையில் எம் பிரதேசத்தில் பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இப்போது பலரும் தம் சிந்தைக்குள் நிறுவி இருக்கும், ஆபாசப் படங்கள் தான் ஓரினச் சேர்க்கையைத் தூண்டுகின்றன எனும் தர்க்கம் உடைத்தெறியப்படுகின்றது. ஆக இது எம் மனங்களுக்குள் ஊடுருவியுள்ள அறியாமையே.. இனி அடுத்த விடயத்திற்கு வருவோம்.

ஒரு ஆணின் பிறப்புறுப்புக்களில் சுரக்கும் பெண்மை சார்ந்த ஹோர்மோன்களின் தூண்டல் அல்லது பெண்ணின் உடல் உறுப்புக்களில் ஆண்மை சார்ந்த ஹோர்மோன்கள் அதிகளவில் சுரப்பதால் ஏற்படும் விளைவுகள் ஒரு பால் இனக் கவர்ச்சியாக மாற்றம் பெற்று விடுகின்றது. இன்னும் விளக்கமாகக் கூறின் ஒரு ஆண் தன்னை ஒத்த இயல்புடைய சற்றுப் பெண்மைக் குணம் கொண்ட இன்னோர் ஆணை விரும்புவதும்; ஒரு பெண் தன்னை ஒத்த கொஞ்சம் ஆண்மைக் குணம் கொண்ட பெண்ணை விரும்புவதும் ஓரினச் சேர்க்கை எனப்படுகின்றது. எமது தமிழ்ப் பாரம்பரியத்தில் நடனம் பயிலும் ஆண்களில் சிலர் அபிநயங்களைச் செய்து நாட்டியம் பழகும் போது இயல்பாகவே பெண்மைக்கேயுரிய சாயலினைப் பெற்று விடுகின்றார்கள். இதன் மூலம் நாளடைவில் தமது நண்பர்களின் உறுப்புக்களில் கை வைத்து அவர்களையும் ஓரினச் சேர்க்கைக்குத் தூண்டி தமக்குள் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் வட்டத்தினை உருவாக்கி விடுகின்றார்கள். ஈழத்தில் நான் கண்ட பல ஓரினச் சேர்க்கையாளர்கள் நடனம் பயின்றவர்களாக இருப்பது இக் கூற்றுக்கு மேலும் வலுச் சேர்க்கும் என்பதால் இங்கே சுட்டியுள்ளேன்.

1980ம் ஆண்டின் பிற் பகுதியிலிருந்து, இலங்கையில் நவீன வசதிகள் அறிமுகப்படுத்தப்படும் வரை அல்லது ஆபாசப் படங்கள் இலங்கையிலும், தமிழகத்திலும் குக் கிராமங்களில் அறிமுகமாகாத காலம் வரை ஓரினச் சேர்க்கையாளர்கள் சமூகத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். ஆபாசப் படங்கள் தான் ஓரினச் சேர்க்கையினைத் தூண்டுகின்றன என்பதெல்லாம் சமூகத்தில் நிலவுகின்ற நம்பிக்கைகளேயன்றி, உண்மையான மனித உணர்வின் அடிப்படையில் நோக்குகின்ற போது, ஆபாசப் படம் அறியப்படாத பல இடங்களில் ஓரினச் சேர்க்கையும், கள்ளக் காதல் விடயங்களும் அரங்கேறியிருக்கின்றன.
இனி என் கருத்துக்களிற்குரிய எடுகோள்கள்:
*1987ம் ஆண்டின் பிற் பகுதியில் யாழ் நகரிற்கு அண்மையாக உள்ள பிரபல மகளிர் பாடசாலை மாணவிகள் ஓரினச் சேர்க்கை செய்யும் நோக்கில் சயன்ஸ் லேப்பில் உள்ள பரிசோதனைக் குழாய்களைப் பெண் உறுப்பினுள் செலுத்தி, ஒரு பாலுறவு செய்ய மேற்கொண்ட சமயத்தில் குழாய் வெடித்ததால், விடயம் வகுப்பாசிரியர் மூலம் விவகாரமாகி, பாதிக்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில் உயிரிழந்திருந்தார். இதே போன்ற சம்பவம் பின் நாளில் 2000ம் ஆண்டும் யாழ் நகரில் உள்ள அதே பாடசாலையில் இடம் பெற்று இன்னோர் மாணவியும் மரணமடைந்திருந்ததாகவும், குறித்த சம்பவம் ஈழத்தின் யாழிலுள்ள உதயன் பத்திரிகையில் வெளியாகிப் பரபரப்பினை ஏற்படுத்தியதாகவும் ஒரு சில நண்பர்கள் மூலமாக அறிந்துள்ளேன்.

*நான் வன்னியில் வாழ்ந்த காலப் பகுதியில் பல கள்ளக் காதற் சம்பவங்களைக் கண்ணுற்றிருக்கிறேன். மனைவிக்குத் தெரியாது கணவன் மனைவியின் தங்கையுடன் தொடர்புகளைப் பேணுவதும், கணவனுக்குத் தெரியாது மனைவி தொடர்புகளைப் பேணுவதும், இறுதியில் எங்கோ ஓரிடத்திலிருந்து நெருப்பு பற்றியதும் விடயம் விவாகாரமாகி தெருவிற்கு வெட்டுக் கொத்தில் முடிவடைவதனையும் வன்னீல் வாழ்ந்த பலர் அறிந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

இவை சாதாரண சம்பவங்களே! இச் சம்பவங்கள் நிகழ்ந்த காலப் பகுதியினையும், மேற்படி பிரதேசங்களில் அக் காலத்தில் நிலவியிருந்த கலாச்சார – தொழில் நுட்ப நிலையினையும் உற்று நோக்கினால் ஆபாசப் படங்களின் வருகையின்றி ஓரினச் சேர்க்கையும், பாலியல் உணர்வுகளும் தூண்டப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் பல ஜாமீன் நிர்வாக முறையின் கீழும் பாலியல் விடயங்கள், பாலியல் அத்து மீறல்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இவற்றுக்கெல்லாம் காரணம் ஆபாசப் படங்களா? இல்லையே! மனித உணர்வுகள் தானே! ஆபாசப் படங்கள் பாலியல் கிளர்ச்சியினைச் சமூகத்தில் உருவாக்கினாலும், ஓரினச் சேர்க்கை எனும் விடயமானது மனித மனங்களின் இயல்பான விருப்பு வெறுப்பின் அடிப்படையிலே தோன்றுகின்றது. இதனைச் சரியாகப் புரீந்து கொள்ளாத வரை எம் சமூகத்தில் மாற்றுப் பாலினத்தவரை மதிக்காது அவர்களை அடிமைப்படுத்தி ஆவேசமாக வசை மாரி பொழிந்து அவர் தம் மனங்களைத் துன்புறுத்தும் செயற்பாடுகளைத் தான் கீழ்த்தரமான மனிதர்களாக நாம் செய்து கொண்டிருப்போம்.

இன்றைய சூழலில் வெளி நாடுகளில் ஒரு பால் உறவு, ஒரு பால் திருமணம் என்பது சட்டபூர்வமாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரு பால் உறவிற்கு காரணம் என்ன? ஒரு மனிதனின் பிறப்பு. ஒரு மனிதன் தன் சக பாலினத்தவரை விரும்புகின்ற அல்லது காதல் செய்கின்ற அல்லது உடலுறவு கொள்ளுகின்ற நிலைக்குத் தள்ளப்படக் காரணம் என்ன? அவனது பிறப்பு. அவன் பிறக்கின்ற போதே வழ்மைக்கு மாறாகச் சில ஹோர்மோன்களின் செயற்பாடுகள் அவன் உடலினுள் ஊடுருவி விடுகின்றது. இதன் காரணமாகவே அவனுக்கு தன் எதிர்பாலார் மீதான கவர்ச்சி ஏற்படுவது தவிர்க்கப்பட்டு, தன் சக பாலினரிடம் இனக் கவர்ச்சி உருவாகின்றது. இதனைப் புரிந்து கொள்ளாத வரை நாம் அனைவரும் ஐந்தறிவு கொண்ட மனித உருவில் வாழும் மிருகங்களே!

மேற்படி சம்பவங்களை அடிப்படையாக வைத்து நான் உங்களிடம் விட்டுச் செல்லும் வினா, ஆபாசப் படங்கள் தான் ஓரினச் சேர்க்கையினைத் தூண்டுகின்றனவா? இல்லைத் தானே. மனித மனங்களின் இயல்பான விருப்பு வெறுப்புக்கள் தானே ஓரினச் சேர்க்கையினைத் தீர்மானிக்கின்றன. இக் கூற்றுக்கள் தொடர்பில் உங்களின் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன். மிகவும் நாகரிகமான முறையில் பகிரப்படும் கருத்துக்களுடன் விவாதிக்க, பதில் வழங்க ஆவலுடன் காத்திருக்கிறேன். Fm தமிழுக்காக ,
உங்கள் நண்பன்

error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...