நியூசிலாந்தில் முயல்களை கொலை செய்யும் வைரஸ் அறிமுகம்

12

நியூசிலாந்தில் முயல்களை கொலை செய்யும் புதிய வகை வைரஸ் ஒ;று அறிமுகம் செய்யப்பட உள்ளது.
நாட்டில் அதிகளவில் முயல்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகவும் இதனால், இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் வைரஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சுர்னுஏ1-மு5 என்னும் வைரஸை பயன்படுத்தி முயல்கள் கொல்லப்பட உள்ளன.
காடுகளில் அதிகளவில் முயல்கள் காணப்படுவதாகவும் இதனால் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
1830களில் நியூசிலாந்தில் முயல்கள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முயல்களினால் விவசாயிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் செல்லப் பிராணிகளாக முயல்களை வளர்த்து வருவோர் அரசாங்கத்தின் இந்த திட்டத்தினை எதிர்த்துள்ளனர்.
முயல்களினால் வருடமொன்றுக்கு 50 மில்லியன் டொலர் வரையில் விவசாய உற்பத்திகள் பாதிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நஞ்சு வைத்தல், துப்பாக்கியினால் சுடுதல் உள்ளிட்ட வழிமுறைகளில் அதிகளவு முயல்களை கொலை செய்ய முடியாது என்ற காரணத்தினால் புதிய வைரஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...