கடலில் நீந்துவது ஆரோக்கியத்திற்கு குந்தகம்

39

கடலில் நீந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு குந்தகமானது என அண்மைய ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகளவில் கடலில் நீந்துவதானது வயிறு தொடர்பான வைரஸ் தாக்கம், காது வலி மற்றும் ஏனைய பல்வேறு நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எக்ஸ்டெர் மெடிக்கல் ஸ்கூல் என்ற பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
நீச்சல் தடாகங்களில் நீந்துவோருடன் ஒப்பீடு செய்யும் போது கடலில் நீந்துவோருக்கு மிகவும் அதிகளவில் காது வலி, வயிறு தொடர்பான நோய்கள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, டென்மார்க் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளில் இது தொடர்பில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
சுமார் 12000 பேரிடம் இது தொடர்பிலான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
கடல் மாசடைவதனால் இவ்வாறு நோய்த் தாக்கங்கள் ஏற்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...