99 வயது வயதில் சாதனை படைத்த அவுஸ்திரேலியர்

16

99 வயதில் அவுஸ்திரேலிய நீச்சல் வீரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
50 மீற்றர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் 99 வயதான அவுஸ்திரேலியர் ஒருவர் சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளார்.
ஜோர்ஜ் கொர்னோஸ் என்ற 99 வயதான முதியவர், அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடைபெற்ற போட்டியில் சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளர்ர்.
ஜோர்ஜ் கொர்னோஸ் இந்த தூரத்தை 56.12 செக்கன்களில் கடந்து வெற்றியீட்டியுள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் இவர் 100 வயதை எட்ட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மிகச் சிறந்த முறையில் தாம் இந்த நீச்சல் போட்டியில் பங்கேற்றதாகவும், சுலபமாக போட்டியில் வெற்றியீட்டியதாகவும் ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.
போட்டிகளில் பங்கேற்பது சவால் மிக்கது என்ற போதிலும் அதனை சிறந்த முறையில் முகாமை செய்வதன் மூலம் இவ்வாறான போட்டிகளில் இந்த வயதிலும் பங்கேற்க முடிகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
100 முதல் 104 வயது வரையிலான வயதெல்லையை உடைய 50 மீற்றர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் ஜோர்ஜ் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...