பறக்கும் கார்களை உருவாக்கும் போர்செச்

16

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான வொக்ஸ்வோகன் நிறுவனத்தின் கிளை நிறுவனமான போர்செச் நிறுவனம், பறக்கும் கார்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது.
பறக்கும் பயணிகள் கார் ஒன்றை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போர்செச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
போர்செச் நிறுவனத்தின் விற்பனை பிரதானி டெட்லேவ் வொன் ப்ளேடென் ஜெர்மனிய சஞ்சிகையொன்றுக்கு இது பற்றி தெரிவித்துள்ளார்.
பெரு நகரங்களில் நிலவி வரும் வாகன நெரிசல் நிலையை தடுக்கும் நோக்கில் இந்த புதிய வகை கார்களை அறிமுகம் செய்வதில் சில முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன.
அப்ளிகேசன்களைக் கொண்டு இந்த கார்களை இயக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...