இயக்குனர் பாலாவின் சர்ச்சை பேச்சு மட்டும் நீக்கப்பட்டது

48

ஜனவரி மாதம் ஒரு பிரபல வார இதழ் விருது விழா நடத்தியது. அதில் கமல்ஹாசன், விஜய், நயன்தாரா உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

அந்த விருது விழாவில் இயக்குனர் பாலா பேசும்போது தகுதியில்லாத சிலருக்கு விருது வழங்கப்பட்டுள்ளதாக மேடையிலேயே பேசினார். இது பெரிய சர்ச்சையாக வெடித்தது.

அந்த விருது விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை டிவியில் ஒளிபரப்பப்பட்ட நிலையில் அதில் பாலா பேசியது மட்டும் நீக்கப்பட்டுள்ளது. மேலும் சர்ச்சையை தவிர்க்கவே இப்படி செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தற்போது பலரும் பேசி வருகின்றனர்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...