Take a fresh look at your lifestyle.

உலகில் இதுவரையில் தீர்வு காணப்படாத 20 மாபெரும் மர்மங்கள்

உலக வரலாற்றில் மனிதனால் உருவாக்க்பபட்ட மற்றும் இடம்பெற்ற சம்பவங்கள் இதுவரையில் மர்மமாகவே தொடர்கின்றது. மனிதனின் அபார திறமைகளினாலோ அல்லது ஏதேனும் விசேட சக்திகளினாலோ இவ்வாறான சம்பவங்கள் மற்றும் படைப்புக்கள் வரலாற்றுக் காலம் முதலே வரலாற்றுக் குறிப்புக்களில் பதியப்பட்டுள்ளன. இவ்வாறு பாமர மக்களை மட்டுமன்றி விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், தாத்துவாசிரியர்கள், வரலாற்று அறிஞர்கள் உள்ளிட்ட மேதைகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இதுவரையில் பதில் கிடைக்கப் பெறாத வரலாற்று மர்மங்கள் பற்றிய தொகுப்பாக இந்தப் பகுதி அமைகின்றது. உங்களது மனத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் இரகசியங்கள் மற்றும் மர்மங்களை விடவும் ஆழமான, அழுத்தமான இந்த மர்மங்களுக்குள் எப்.எம்.தமிழ் இணைய தளம் உங்களை அழைத்துச் செல்கின்றது.

1. தென் ஆபிரிக்காவின் இன்கா பேரரசு

கிறிஸ்துவிற்கு பின் 1200ம் ஆண்டு முதல் 1535ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பாரிய இன்கா பேரரசு கட்டியெழுப்பப்பட்டது. தென் அமெரிக்காவை மையமாகக் கொண்ட மலைத் தொடர்களில் உருவாக்கப்பட்ட இந்த நாகரீகம் மனிதனின் விந்தை மிக்க திறமைகளை வெளிப்படுத்தி நிற்கும் வகையில் அமையப் பெற்றிருந்தது. நீர் வடிகாலமைப்பு, கழிவு நீரகற்றல் போற்றன மிகவும் திட்டமிட்ட வகையில் நவீன காலத்து நகரத் தி;டடமிடல்களுக்கு சவால் விடுக்கக் கூடிய வகையில் நிர்மானிக்கப்பட்டிருந்தது. கற்கலினால் ஆன பாரிய நகரங்கள் இந்தப் பேரரசின் மற்றுமொரு விசேட அம்சமாகும். மச்சு பிக்சு நகரம் இந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. கட்டிட நிர்மானத்திற்கு தேவையான பாரியளவிலான கற்கள் வாகனங்கள் எதுவுமின்றி போக்குவரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும், 40000 படையினரைக் கொண்ட இன்கா பேரரசரினால், நவீன ஆயுத பலத்தைக் கொண்ட 180 ஸ்பெய்ன் படையினருடன் மோதி வெற்றியடைய முடியவில்லை. இன்கா படையினரின் தோல்விக்கு அம்மை நோயும் ஓர் பிரதான காரணியாகும். இந்த பண்டைய நகரநிர்மான நுட்பம் இன்று வரையில் புரியாத புதிராகவே தொடர்கின்றது.

2. எகிப்தின் கிஸா பிரமிட்கள்

எகிப்தின் கிஸா நகரில் உருவாக்கப்பட்டுள்ள பிரமிட்கள் மனித மதி நுட்பத்தையும், அபார கட்டிடக் கலைத் திறமையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. கிஸாவில் அமைந்துள்ள குபு பிரமிட் இரண்டு மில்லியன் கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கற்கலில் ஒரு சில கற்கள் ஒன்பது மில்லியன் தொன் எடையுடையது. கிறிஸ்துவுக்கு முன் 2550ம் ஆண்டு இந்த பிரமிட் நிர்மானிக்கப்பட்டது. இறந்த எகிப்திய பேரரசர் ஒருவரின் உடல் இந்த பிரமிட்டில் புதைக்கப்பட்டுள்ளது. கற் குவாரிகளிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கற்கலினால் பிரமிட் உருவாக்கப்பட்டுள்ளது. பிரமிட்டை உருவாக்குவதற்கு நிபுணத்துவம் வாய்ந்த கலைஞர்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அடிமைகளைக் கொண்டு உருவாக்கப்படவில்லை எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எகிப்தின் கிஸா பிரமிட்கள் உருவாக்கம் தொடர்பான மர்மத்திற்கு இன்று வரையில் விடை கிடைக்கப்பெறவில்லை.

3. மாயன் ஆலயம்

மெசோமார்னிக்கன் நீண்ட நாட்காட்டியின் பிரகாரம் இந்த மாயன் ஆலயம் 2012ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆலயம் நிர்மானிக்கப்பட்ட காலம் தொடர்பில் தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு மத்தியில் முரண்பட்ட கருத்து நிலவி வருகின்றது. எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள பாரிய பேரழிவை குறிக்கும் நோக்கில் இந்த ஆலயம் நிர்மானிக்கப்பட்டிருக்கலாம் என சிலர் கருதுகின்றனர். கட்டடம் உருவாக்கப்பட்ட காலம் தொடர்பிலான தவறுதலான கணிப்பு இடம்பெற்றிருக்கலாம் என மற்றுமொரு சாரார் தெரிவிக்கின்றனர். எது எப்படியிருப்பினும் மாயன் ஆலயம் பற்றிய புதிர் கேள்விக்குறியாக காணப்படுகின்றது.

4. எல் டொராடோ

எல் டொராடோ என்ற பதம் மியுசிக்கா பழங்குடியினரிடமிருந்து உருவானது. மியுசிக்கா பழங்குடியினர் கிறிஸ்துவுக்கு பின் 1000 முதல் 1538ம் ஆண்டு வரையில் வாழ்ந்தனர். இந்த பழங்குடி மக்களின் தெய் வழிபாட்டு கிரியைகள் சற்றே விசித்திரமானது. பிரதான பூசகர் தங்கத் துகள்களை உடலில் தடவிக் கொண்டு தெய்வத்திற்கு காணிக்கையாக தாமே குளத்தில் குதித்துவிடுவார். தொலைந்து போன தங்க நகரமொன்றை தேடி வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஸ்பெய்ன் படையினர் இந்த நகரத்தை தேடிய போதிலும் கடைசி வரையில் இந்த நகரத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. இது வரையில் இந்த தங்க நகரம் எவர் கண்களுக்கும் தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

5. ஈஸ்டர் தீவு

ஈஸ்டர் தீவுகள், ராபா நூயீ என்றும் அழைக்கப்படும். தாத்திக்கு இரண்டாயிரம் மைல் தொலைவில் உள்ள பிற்படுத்தப்பட்ட பிரதேசமொன்றில் இந்தத் தீவு அமையப்பெற்றுள்ளது. இந்தத் தீவுகளின் பூர்வீகக் குடியிருப்பாளர்களாக பொலிநேசியர்கள் கருதப்படுகின்றனர். கிறிஸ்துவுக்கு முன் 400 – 600ம் ஆண்டு காலப்பகுதியில் இந்தத் தீவுகளில் பொலிநேசியர்கள் குடியேறியிருந்தனர். இந்த மக்கள் தெய் வழிபாடுகளை மேற்கொள்வதற்காகவும் கலைத் திறமைகளை வெளிப்படுத்துவதற்காகவும் பூதாகாரணமான கற் சிலைகளை உருவாக்கினர். இந்த சிலைகளை நிர்மானிப்பதற்கு எவ்வாறு கற்கள் இடம் நகர்த்தப்பட்டன என்ற வினா ஆய்வாளர்களுக்கு பெரும் ஆச்சரியக் குறியாகவே தொடர்கின்றது.

6. பெர்மியூடா முக்கோணம்

பெர்மியூடா முக்கோணம் அட்லாண்டிக் கடற்பரப்பில் புளொரிடா, பெர்மியூடா மற்றும் பியூர்ட்டோ ரிக்கோ ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த முக்கோணம் படகுகள் மற்றும் விமானங்களைத் திருடும் ஓர் கொள்ளைக் கடற்பரப்பாக வர்ணிக்கப்படுகிறது. சார்ஜென்ட் ஹோவெல் தொம்சனும், 27 கடற்படை வீரர்களும் பயணம் செய்த விமானமொன்று மர்மமான மறையில் காணாமல் போனதனைத் தொடர்ந்து இந்த இடத்திற்கு பெர்மியூடா முக்கோணம் என பெயரிடப்பட்டது. அமானுஷ்யமான சக்திகளின் தொழிற்பாட்டினால் இவ்வாறான அனர்த்தங்கள் நிகழ்வதாக சிலர் குறிப்பிடுகின்றனர். எனினும், கடற்புயல்கள், மனித தவறுகள் உள்ளிட்ட காரணிகளினால் இவ்வாறு விமானங்களும், படகுகளும் காணாமல் போவதாக மற்றுமொரு தரப்பினர் தெரிக்கின்றனர். எனினும், பெர்மியூடா முக்கோணத்தில் காணாமல் போன கப்பல்கள் மற்றும் விமானங்கள் பற்றிய துல்லியமான தகவல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.

7. நாஸ்கா கோடுகள்

பேரு நாட்டின் தென் பகுதி பாலைவனப் பகுதியில் இந்த நாஸ்கோ கோட்டுச் சித்திரம் கீறப்பட்டுள்ளது. சுமார் 190 சதுர கிலோ மீற்றர் பரப்பில் இந்த சித்திரம் வரையப்பட்டுள்ளது. இன்கா சாம்ராஜ்ஜிய காலத்திற்கு முன்னதாக இந்த நிலச் சித்திரம் கீறப்பட்டுள்ளது. தி லாஸ் மானோஸ் என்ற உருவம் 2000ம் ஆண்டுகள் பழமையானது. நாஸ்கா மக்கள் இவ்வளவு பாரிய நிலச்சித்திரம் ஒன்றை எதற்காக தீட்டினார்கள் என்பது புரியாத புதிராகத் தொடர்கின்றது. இது நிலத்திலேயே காணப்பட்ட ஓர் இயற்கையான அமைப்பு என சிலர் கருதுகின்றனர்.

8. வேற்றுக் கிரகவாசிகள்

தென் நிவேடாவின் குரும் நதிக்கு அருகாமையில் ஏரியா51 பகுதி அமைந்துள்ளது. உளவுப் பணிகளை மேற்கொள்வதற்காவும் விமானங்களை பரீட்சிப்பதற்காகவும் 1955ம் ஆண்டு அமெரிக்க விமானப்படையினரால் இந்த கட்டடம் உருவாக்கப்பட்டது. யூ-2 ஸ்பை, ஏ-12 பிளக்பார்ட் மற்றும் எப்-117 ரகவிமானங்கள் இங்கு பரீட்சிக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை. மிகவும் நூதனமான முறையில் இந்த விமான ஆய்வு நிலையம் அமைந்துள்ளது. வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பில் இந்த ஆய்வு நிலையத்தில் ஆய்வு நடத்தப்படுவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

9. கிஸாவின் ஸ்பெனிக்ஸ்

எகிப்தின் கிஸாவில் உள்ள மற்றமொரு பிரமிட் தொகுதியே ஸ்பெனிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த விசித்திரமான பிரமிட் மனித் தலையையும், சிங்கத்தின் உடலமைப்பையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எகிப்தின் பண்டைய மன்னர் கப்பாரேவை இந்த உருவம் குறிப்பதாக பலர் கருதுகின்றனர். சுண்ணாம்புக் கற்கலினால் இந்த பிரமிட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையின் மூக்குப் பகுதி நெப்போலியனின் படையினரால் உடைக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது. 1798ம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறெனினம் நெப்போலிய மன்னரின் படையெடுப்புக்கு முன்னதாகவே குறித்த பிரமிட் சிலையின் மூக்குப் பகுதி அகற்றப்பட்டிருந்ததாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

10. லொச் நெஸ் குதிரை

ஸ்கொட்லாந்து சிறுவர்கற்பனைக் கதைகளில் நீர்க் குதிரையின் பாத்திரம் மிகவும் முக்கியமானது. நீரில் செல்லக் கூடிய இந்தக் குதிரை பற்றி ஸ்கொட்லாந்து இலக்கியங்களில் அதிகளவில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஸ்கொட்லான்தின் லொச் நெஸ் தீவுகளில் இந்த வகை குதிரைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் 1933ம் ஆண்டு இந்த லொச் நெஸ் மிருகம் பற்றி உலகில் அதிர்வுகள் ஏற்பட்டன. லொச் நெஸ் மிருகம் ஆங்கிலப் பத்திரிகைகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எவ்வாறெனினும், இந்த மிருகம் பற்றிய வலுவான ஆதாரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

11. இளமை நீர் ஊற்று

1509ம் ஆண்டு ஸ்பெய்ன், அமெரிக்காவை ஆட்சி செய்த காலத்தில் பியுட்ரோ ரிக்காவின் ஆளுனராக திகழ்ந்த டொன் ஜூவான் பொன்ஸ் டி லியொன் இளமை ஊற்றைத் தேடி தொலை தூரம் சென்றார். பிமினி தீவுகளில் இந்த இளைமை ஊற்றுக் காணப்படுவதாகவும் இதில் நீராடுபவர்கள் வாலிபப் பருவத்தை மீளப்பெற்றுக் கொள்ள முடியும் என்ற தகவலினால், டி லியொன் குறித்த தீவுகளைத் தேடிச் சென்றார். இந்த ஊற்று புளொரிடா தீவுகளில் காணப்பட்டதாக நம்பப்படுகிறது. பிரபல மாயஜால நிபுணர் டேவிட் கொப்பர்பீல்டின் 50 மில்லியன் எக்சியூமாஸ் தீவுகளில் இந்த இளமை ஊற்று காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த இளமை ஊற்று பற்றிய தகவல்கள் இன்னமும் மர்மமாகவே தொடர்கின்றது.

12. ச்சுபாக்கபரா

ச்சுபாக்கபரா என்பது ஓர் விசித்திரமான விலங்கினமாகும். டெக்ஸ் குயிரோவைச் சேர்ந்த ஹெய்லி;ஸ் கெனியன் என்ற பெண் முதல் முதலில் இந்த வகையிலான விலங்கினம் பற்றிய தகவல்களை வெளியிட்டார். 1995ம் ஆண்டு பியுட்டோ ரிக்காவில் இந்த வகை விலங்கினம் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டது. ஆடுகளின் இரத்தத்தையும், கோழியின் சுவையையும் கொண்டு அமைந்ததாக இந்த விலங்கினத்தின் இறைச்சி காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் இந்த வகையிலான விலங்கினங்கள் உயிர் வாழக் கூடிய சாத்தியமில்லை என உயிரியல் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

13. கொன்வன்ட் ஆர்க் பேழை

இந்தப் பேழை தொடர்பில் கிறிஸ்தவர்களின் வேதாகம புனித நூலான பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பைபளின் பத்துக் கட்டளைகள் தொடர்பிலான நினைவுச் சின்னங்கள் இந்த பேழையில் வைக்கப்பட்டுள்ளது. மரத்தினால் ஆன இந்தப் பேழை தங்க மூலம் பூசப்பட்டதெனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பேழை பாலை வனங்களுக்கு ஊடாக மிக நீண்ட தூரம் எடுத்துச் செல்லப்பட்டது. பபிலோனியன் மன்னர்களினால் படையெடுக்கப்படும் வரையில் இந்தப் பேழை இஸ்ரேலிய தேவாலயமொன்றில் பாதுகாக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது அந்தப் பேழைக்கு என்னவாயிற்று என்பது பற்றிய தகவல்கள் கிடையாது.

14. கற்கால வட்டக் கற்கள்

இங்கிலாந்தின் செலிஸ்பெரி பகுதியில் கற்கால வட்டக் கற்கள் காணப்படுகின்றன. இது தற்போது பிரபலமான சுற்றுலா புரியாக அமைந்துள்ளது. இந்தப் கற்கால வட்டக் கற்கள் 5000 ஆண்டுகளக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருக்கலாம் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

15. டெல்லியன் இரும்புத் தூண்

டெல்லியின் இரும்புத் தூண் (ஐசழn Pடைடயச) 1600 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் டெல்லியில் உள்ள கியூடெப் என்னும் இடத்தில் இந்த தூண் நிர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தூணின் நீளம் 22 அடிகளாகும். பண்டைய காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தத் தூண் 98 வீதம் இரும்பை அடித்து உருவாக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட காலமாக மழை வெயில் புயல் போன்ற இயற்கை சவால்களுக்க வெற்றிகரமாக முகம் கொடுத்து இந்த இரும்புத் தூண் கம்பீரமாக காட்சியளிக்கும் விதம் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

16. கொஸ்ட்ரிக்கா கற் பந்து

கொஸ்ட்ரிக்காவில் அமைந்துள்ள கல் பந்து 1940ம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது. ஐக்கிய பழ நிறுவனமொன்று மண் அகழும் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த கல் பந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவுக்கு பின் 600 ஆண்டு முதல் 16ம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதியில் இந்த கல் பந்து உருவாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. இந்த கற் பந்தை உருவாக்கியவர்கள் பற்றியோ அல்லது எதற்காக உருவாக்கப்பட்டது என்பது பற்றியோ இதுவரையில் தெளிவான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. சூரியனை வழிபடுவதற்காக இந்த கல் பந்து உருவாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

17. மொத்மான் (மொத்மனிதன்)

பூச்சிகளின் சிறகுகளைக் கொண்ட மனித உடலமைப்பைக் கொண்ட கொடி விலங்கு மிகவும் அபாயகரமானது என குறிப்பிடப்படுகிறது. 1960களில் இந்த மிருகம் காணப்பட்டமைக்கான உறுதியான ஆவணங்கள் வெளியிடப்பட்டன. ஊடகவியலாளர் ஜோன் ஏ கீல்ஸ் இந்த விசித்திர மிருகம் பற்றிய தகவல்களை வெளியிட்டிருந்தார்.

18. ஜெர்சி பேய்

250 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்சி பேய் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டன. லீட்ஸ் என்ற பெண் தனது 13 அவது பிரசவத்தின் போது ஈன்றெடுத்த குழந்தை விசித்திரமானதாக காணப்பட்டது. இந்தச் சிசு கங்காருவைப் போன்ற உடலமைப்பையும், சிறகுகளையும் கொண்டமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குழந்தை பிறந்த சில நொடிகளிலேயே பறந்து சென்று பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. நியூ ஜெர்சியில் நடைபெறும் உள்ளுர் ஹொக்கிப் போட்டிகளில் குறியீடாக இந்த வகைப் பேய்களின் உடைகள் விநோதமாக அணியப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

19. ரஸ்யாவின் துன்குஸ்கா வெடிப்பு

1908ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் திகதி காலை 7.14 மணிக்கு ரஸ்யாவில் துன்குஸ்கா வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது. இன்று வரையில் இந்த வெடிப்புச் சம்பவத்திற்கான காரணிகள் கண்டறியப்படவில்லை. இந்த வெடிப்புச் சம்பவம் 830 சதுர மைல் வரையில் பாதிப்பை ஏற்படுத்தியது.

20. அட்லாண்டிஸ் தொலைந்த நகரம்

2400 ஆண்டுகளுக்கு முன்னர் பிளாட்டோவினால் இந்த அட்லாண்டிஸ் தொலைந்த நகரம் அறிமுகப்படுத்தப்பட்டது. நவீன தலைமுறையின் நகரமாக அதனை பிளாட்டோ வர்ணித்திருந்தார். நில அதிர்வினால் இந்த நகரம் அழிவடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நகரம் நீருக்கு மூழ்கியதாகவும் மார்மெய்ட்டுகளினால் பாதுகாக்கப்பட்டதாகவும் மற்றுமொரு தகவல் குறிப்பு சுட்டிக்காட்டுகின்றது. எனினும், இந்த அட்லாண்டிஸ் நகரம் பற்றிய தகவல்கள் இதுவரையில் துல்லியமாக கண்டு பிடிக்கப்படவில்லை. மத்திய தரைக் கடலின் சைப்ரஸ் பகுதியில் இந்த நகரம் அமைந்திருக்கலாம் என அண்மைய ஆய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன. எனினும்,மெய்யான அட்லாண்டிஸ்கள் பஹாமாஸில் வாழ்கின்றனர்.

அனுமதியின்றி இந்தக் கட்டுரை பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
காப்புரிமை: எப்.எம்.தமிழுக்கே!

error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...