சமூக ஊடகங்களின் மூலம் பெருந்தொகை சம்பாதிக்கும் பிரியா வாரியர்

39

மலையாள திரையுலகில் விரைவில் வெளிவர உள்ள ஒரு அடார் லவ் படத்தின் கதாநாயகி பிரியா பிரகாஷ் வாரியர், சோஷியல் நெட்வொர்க்கில் ஒரு போஸ்டிற்கு ரூ. 8 லட்சம் வரை சம்பளம் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக வலைதளங்களின் மூலம், யார் வேணும்னாலும் ஒரேநாளில் பிரபலம் ஆகமுடியும் என்பதற்கு தற்போதைய நிகழ்வு சாட்சி. பழைய விஷயங்களையே, சற்று புதுமையாக செய்தாலே பிரபலமாகி விடலாம்..
ஜிமிக்கி கம்மல் பாடல், தேசிய அளவில் பிரபலமானதை தொடர்ந்து, மலையாள திரையுலகமும், தற்போது தங்கள் பட புரோமோஷன்களுக்கு சமூக வலைதளங்களை நாட துவங்கியுள்ளது.
விரைவில் வெளிவர உள்ள ஒரு அடார் லவ் படத்தின் பாடலான மாணிக்யா மலராயா பூவி பாடலின் திரைவடிவமும், கதாநாயகியின் பாவனைகளும் சமூகவலைதளங்களில் வைரலாக பரவின. இந்த படத்தின் கதாநாயகி பிரியா பிரகாஷ் வாரியர், ஒரேநாளில் தேசிய அளவில் பிரபலமானார். இதன்மூலம் பிரபலமான பிரியா வாரியரின் இன்ஸ்டாகிராமில் ஒரேநாளில் 606 ஆயிரம் பேர் பாலோயர்களாக சேர்ந்தனர். பாலோயர்களின் எண்ணிக்கை அடிப்படையில், பாலிவுட் நட்சத்திரங்களான தீபிகா படுகோன் உள்ளிட்ட நட்சத்திரங்களை முந்திய பிரியா வாரியர், சர்வதேச அளவில், ஹாலிவுட் ரியாலிட்டி ஷோ பெர்சனாலிட்டி கெய்லி ஜென்னர், சர்வதேச கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டினோவை முந்தினார்.
இந்தியா டிவி நடத்திய ஆய்வின் படி, பிரியா வாரியருக்கு, சமூக வலைதள போஸ்டின் மூலம், ரூ. 8 லட்சம் வரை சம்பளமாக கிடைக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பள விவகாரம் உண்மையா, என்பதை பிரியா வாரியர் தான் விளக்க வேண்டும்

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...