பொய் செய்திகளே அதிகளவில் மக்களைச் சென்றடைகின்றது

74

பொய் செய்திகளே அதிகளவில் மக்களைச் சென்றடைகின்றது என புதிய ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 11 ஆண்டுகளில் டுவிட்டர் ஊடாக பதிவிடப்பட்ட பொய்யான செய்திகள் மற்றும் வதந்திகளே அதிகளவில் மக்களைச் சென்றடைந்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
மசாசூட்ஸ் தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆய்வாளர்கள் இந்த ஆய்வினை நடத்தியுள்ளனர்.
உண்மையான செய்திகளை விடவும் பொய்யான செய்திகள் அதகிளவில் வேகமாக பரவுவதாகத் தெரிவித்துள்ளனர்.

அரசியல், வர்த்தகம், பயங்கரவாதம், விஞ்ஞானம், இயற்கை அனர்த்தங்கள், பொழுதுபோக்கு போன்ற துறைகளில் பொய்யான செய்திகள் அதிகளவில் மக்களைச் சென்றடைந்துள்ளன.
போலியான செய்திகளை மக்கள் அதிகளவில் பகிர்வதில் ஆர்வம் காட்டி வருவதாக பேராசிரியர் சினான் அரால் தெரிவித்துள்ளார்.
உண்மையான செய்திகளை 1000 பேர் பகிர்ந்து கொண்டால் பொய்யான செய்திகள் 100,000 பேரினால் பகிர்ந்து கொள்ளப்படுவதாகத் தெரிவிகத்துள்ளார்.
நம்பகத்தன்மை குறைந்தாலும் கிசுகிசுக்களை பகிர்ந்து கொள்வதில் மக்களின் நாட்டம் அதிகளவில் காணப்படுகின்றது என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...