தவளைகளின் உடற்தோலை புற்று நோய் மருந்தாகப் பயன்படுத்த முடியும்

72

தவளைகளின் உடற்தோலை புற்று நோய் மருந்தாகப் பயன்படுத்த முடியும் என குயின்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.
ஒரு வகை தவளையின் தோலைப் பயன்படுத்தி 70 வகையான நோய்களைக் குணப்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

லண்டனில் நடைபெற்ற மெடிக்கல் பியுச்சர்ஸ் இனோவேசன் மருத்துவ விருது வழங்கும் விழாவில் குறித்த ஆய்வாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிறிஸ் ஸோவ் தலைமையிலான ஆய்வாளர்கள் குழு, தவளைகளின் உடற்தோலைக் கொண்டு மருந்துகளை தயாரித்துள்ளது.
குருதிக் கலன்களின் வளர்ச்சிக்கு தவளைகளின் தோல்களில் காணப்படும் புரதப் பொருள் உதவியாக அமைகின்றது என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குருதிக் கலன்களை வளர்ச்சியடையச் செய்யவும், புற்று நோய்க்கட்டிகளை அழிப்பதற்வதற்குமான மருந்துப் பொருட்களை வெக்ஸி மன்கீ ப்ரொக் (றயஒல அழமெநல கசழப) தவளைகளின் உடற் தோலைப் பயன்படுத்தி தயாரிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குருதிக் கலன்களின் ஊடாகவே அநேகமான புற்று நோய்க்கட்டிகள் உருவாவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குருதிக் கலன்களை கட்டுப்படுத்துவதன் மூலம் புற்று நோய்க்கட்டிகளை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
குருதிக் கலன்களுடன் தொடர்புடைய பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது இந்த தவளைத் தோல் மருந்துகளை பயன்படுத்த முடியும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
காயங்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, இருதய நோய், நீரிழிவு போன்ற நோய்களின் போது எதிர்காலத்தில் இருந்த மருந்துகளை பயன்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மருத்துவக் கண்டுபிடிப்பை பொதுவான மருந்துப் பொருளாக அறிமுகப்படுத்துவதற்கு இன்னும் பல தடைகள் தாண்ட வேண்டிய நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...