தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை – அமெரிக்கா

57

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆதிக்கம் முடிவுக்கு வரவில்லை. அவ்வப்போது அந்த நாட்டின் ராணுவ வீரர்கள் மீதும், அமெரிக்க கூட்டுப்படையினர் மீதும் கொடூர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் தலைநகர் காபூலில் நடந்த அமைதி மாநாட்டில் அந்த நாட்டின் அதிபர் அஷரப் கனி, தலீபான்களுடன் நிபந்தனையற்ற பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார்.

ஆனால் தலீபான்களை பொறுத்தவரையில், அமெரிக்காவுடன் நேரடி பேச்சு வார்த்தை நடத்தத்தான் விரும்புகின்றனர். இது தொடர்பாக அவர்கள் விருப்பம் வெளியிட்டு உள்ளனர்.

இந்த நிலையில், வாஷிங்டனில் அமெரிக்க அமைதி இன்ஸ்டியூட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களை கவனிக்கிற வெளியுறவுத்துறை உயர் அதிகாரி ஆலிஸ் வெல்ஸ், இதுபற்றி பேசினார். அப்போது அவர் கூறுகையில், “ வடகொரியா, தென் கொரியா விவகாரங்களையும், ஆப்கானிஸ்தான் நிலைமையையும் ஒப்பிட முடியாது. அமெரிக்க ஜனாதிபதி பேச்சு வார்த்தைக்கு ஒப்புதல் அளிக்கும் முன்னரே, வட கொரியா மற்றும் தென்கொரியா தலைவர்கள் சந்தித்துப் பேசி உள்ளனர். ஆப்கானிஸ்தான் நிலைமை அது அல்ல” என குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசும்போது, “ஆப்கானிஸ்தானை பொறுத்தவரையில் அங்கு கிளர்ச்சி நடக்கிறது. கிளர்ச்சியாளர்களும் (தலீபான்களும்), அரசாங்கமும் முதலில் நேரடியாகப் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அவர்கள் விவகாரத்தில் தீர்வு காண விரும்புவோருடனும் பேச வேண்டும். இதில் நாங்கள் மிகவும் உறுதியாக உள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

இதன்மூலம், ஆப்கானிஸ்தான் அரசுடன் தலீபான்கள் பேச்சு நடத்தாதவரையில், அமெரிக்கா அவர்களுடன் பேசாது என்பதை ஆலிஸ் வெல்ஸ் தெளிவுபடுத்தி உள்ளார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...