தமிழ் படத்தில் நடிக்கப் போவதில்லை – பார்வதி

61

நடிக்கும் படங்களில் எல்லாம் சிறந்த நடிகை பெயரெடுத்து விடுகிறார் பார்வதி. ஆனால் தமிழ் பக்கம் மட்டும் வர மாட்டேன் என்கிறார்.

சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் இயக்குநராவதற்காக தயார் செய்து வைத்திருக்கும் கதையை பார்வதியிடம் சொல்ல முற்பட்டிருக்கிறார். பார்வதியோ தமிழில் நடிக்க விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டாராம். இப்போதைய நடிகைகளில் நடிப்பில் ஸ்கோர் செய்யும் ஒரே நடிகையான பார்வதி ஏன் தமிழை மட்டும் வெறுக்கிறார் என்பதற்கு காரணம் தெரியவில்லை.

ஒல்லி நடிகருடன் பார்வதி கடல் தொடர்பான படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. தான் சொன்னபடி கேட்கவில்லை என்பதற்காக ஒல்லி நடிகர் ஒரு காட்சியில் வேண்டுமென்றே நடிகையை எட்டி உதைத்தார் என்று செய்தி பரவியது. இதுபோன்ற டார்ச்சர்களால் தான் பார்வதி தமிழ் பக்கம் வர பயப்படுகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...