மனைவியை கொலை செய்ய முயற்சித்தாரா வேகப்பந்து வீச்சாளர் சாமி?

92

இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முஹமட் சாமி மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தி, காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மொஹமட் சாமி மீது அவரது மனைவி கொலை முயற்சி குற்றச்சாட்டு சமத்தியுள்ளார்.
சாமியும் அவரது குடும்பத்தினரும் தம்மை கொலை செய்ய முயற்சிக்கின்றனர் என சாமியின் மனைவி ஹாசீன் ஜஹான், காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
சாமியின் சகோதரர் தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அதிகளவான தூக்க மாத்திரைகளை வழங்கி தம்மை கொலை செய்ய சாமி குடும்பத்தினர் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதத்தில் சாமி குடும்பத்தினர் தம்மை கொலை செய்ய முயற்சித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாமியின் மனைவி ஹாசீன் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சுமத்தி, கொல்கொத்தாவின் காவல் நிலையமொன்றில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாடு குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...