துப்பாக்கியுடன் கால்பந்தாட்ட மைதானத்தில் நுழைந்த கழகத் தவிசாளர்

54

கிரேக்கத்தின் பிரபல கால்பந்தாட்ட கழகமொன்றின் தவிசாளர் துப்பாக்கியுடன் போட்டி நடைபெறும் மைதானத்திற்குள் நுழைந்து நடுவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
கிரேக்கத்தின் முதனிலை கழகங்களில் ஒன்றான பாவோக் சலோனிக்கா என்னும் கழகத்தின் பாவோக் ஸலோனிக்கா கழகத்தின் தவிசாளர் ஐவன் சாவிடிஸே இவ்வாறு துப்பாக்கியுடன், கால்பந்தாட்ட மைதானத்தில் புகுந்துள்ளார்.
போட்டியின் 89ம் நிமிடத்தில் சலோனிக்கா கழகத்தின் வீரர் போட்ட கோல், ஓப் சயிட் என நடுவர் தீர்ப்பளித்திருந்தார்.
இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டு, ஸ்லோனிக்கா கழகத்தின் தவிசாளர் துப்பாக்கியுடன் நடுவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந்த மோதல் காரணமாக எதிர்த்தாடிய ஏதேன்ஸ் கழகத்தினர் மைதானத்தை விட்டு வெளியேறிச் சென்றனர்.
இந்தப் போட்டி ரத்து செய்யப்படுவதாக கால்பந்தாட்ட போட்டி நிர்வாகம் அறிவித்திருந்தது.
துப்பாக்கியுடன் நடுவர் அருகாமையில் சென்ற கழகத்தின் தவிசாளர் ஐவானை, ஏனையவர்கள் தடுத்து சமாதானப்படுத்தியுள்ளனர்.
இறுதியில் நடுவர் தாம் வழங்கிய தீர்ப்பினை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...