குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக கமல், வைரமுத்து இரங்கல்

50

தமிழ்நாட்டில் தற்போது பலரையும் துயரப்பட வைத்திருப்பது தேனி மாவட்ட குரங்கணி தீவிபத்து சம்பவம். வனப்பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் சிலர் உயிரிழந்துள்ளனர்.

பலர் பலத்த காயமடைந்துள்ளனர். இன்னும் சிலர் வனப்பகுதிக்குள் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், வைரமுத்து போன்றோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கமல் கூறுகையில், குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள். மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள் என கூறியுள்ளார்.

வைரமுத்து தன் பதிவில் உயிர் வலிக்கிறது; ஊரே அழுகிறது. காட்டுத்தீயில் கருகிய தங்கங்கள் மீது கண்ணீர் சொரிகிறேன். காயப்பட்டவர்கள் பிழைக்க வேண்டுமே என்று பேராசை கொள்கிறேன்.

பெற்றோர் நிலையில் நின்று பெருவலி உணர்கிறேன். “சாவே உனக்கொருநாள் சாவு வந்து சேராதோ; தீயே உனக்கொருநாள் தீமூட்டிப் பாரோமோ” என்ற கண்ணதாசன் வரிகளைக் கடன்வாங்கிக் கலங்குகிறேன்.

இந்த விபத்தில் இயற்கையின் பங்கு எவ்வளவு, மனிதப் பங்கு எவ்வளவு என்பது ஆய்வுக்குரியது. மரணத்திலிருந்து பாடம் படிப்போம்; புதிய இழப்புகள் நேராமல் காப்போம் என கூறியுள்ளா

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...