நீங்கள் என்றும் இளமையுடன் இருக்க விரும்புகின்றீர்களா?

30

நீங்கள் என்றும் இளமையுடன் இருக்க விரும்புகின்றீர்களா அப்படியாயின் பெரிதாக ஒன்றும் செலவிடத் தேவையில்லை, உடல் பயிற்சி செய்தாலே என்றும் இளமையாக இருக்க முடியும் என நவீன ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வயது முதிர்விலும் அதிகளவில் உடற் பயிற்சியில் ஈடுபடுவது சிறந்த தேக ஆரோக்கியத்தை தரும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
82 வயதான லண்டன் கிங்ஸ் கல்லூரி பேராசிரியர் நோர்மன் லாசரஸ் இந்த ஆய்வில் பங்கேற்று ஆய்வு செய்துள்ளார்.


ஏஜிங் செல் என்ற சஞ்சிகையில் இந்த ஆய்வு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
20 வயதின் பின்னர் எமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி ஆண்டு தோறும் 2 முதல் 3 வீதம் வரையில் வீழ்ச்சியடைகின்றது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும் கடினமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி வீழ்ச்சியடைவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட தூரம் சைக்கிளோட்டம் மேற்கொள்ளும் நபர்கள் 125 பேரிடம் இது தொடர்பிலான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு நீண்ட உடற் பயிற்சியில் ஈடுபடுவோரின் உடற் கலங்ககளின் நோய் எதிர்ப்பு சக்தி 20 வயதுடையவர்களின் அளவிற்கு திடகாத்திரமாக காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே அதிகளவில் உடல் பயிற்சி மேற்கொள்வது, உடல், உள மேம்பாட்டை உறுதி செய்யும் என்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...