காத்மண்டுவில் இடம்பெற்ற விமான விபத்தில் பலர் பலி

31

காத்மண்டுவில் இடம்பெற்ற விமான விபத்தில் 38 பேர் பலியாகியுள்ளனர்.
71 பேரை ஏற்றிச் சென்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறைந்தபட்சம் இந்த விபத்தில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், குறைந்தபட்சம் 17 பேர் உயிர் பிழைத்துள்ளனர் என காத்மண்டு தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
விமானத்தில் பயணித்த ஏனையவர்கள் பற்றிய விபரங்கள் இன்னமும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.

நேபாளத்தின் காத்மண்டு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பங்களாதேஸிற்கு சொந்தமான யூஎஸ்.பங்களா விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஓடு பாதையில் தரையிறக்கப்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்ற காத்மண்டுவின் ட்ரைபுவான் விமான நிலையத்தின் அனைத்து சர்வதேச விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த விமானத்தில் 67 பயணிகளும் நான்கு சிற்பந்திகளும் பயணித்துள்ளனர்.
இந்த விமான விபத்தில் குறைந்தபட்சம் 50 பேர் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரபூர்மற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...