சமூக ஊடகத் தடையினால் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்குமாறு கோரி மனு

16

சமூக ஊடகங்களின் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டுமெனக் கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்பாடல் வழிமுறைகள் முடக்கப்பட்டதனால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகள் ஒன்றியம் இன்று மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது.

அடிப்படை உரிமை மீறப்பட்ட அனைவருக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் உடனடியாக சமூக ஊடக வலையமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட வேண்டுமென ஒன்றியத்தின் அழைப்பாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகத் தொடர்பாடல் வழிமுறைகளை முடக்கப்பட்டமை அரசியல் சாசனத்தின் 3ம் சரத்தின் 14(1)(அ) பிரிவின் அடிப்படையில், மக்களின் தொடர்பாடல் உரிமையை மீறும் வகையிலாலனது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...