Take a fresh look at your lifestyle.

இந்திய பந்து வீச்சாளர்கள் சிறந்த முறையில் பந்து வீசினர் – ரோஹித் சர்மா

அணியின் பந்து வீச்சாளர்களது ஆபார பந்து வீச்சுத் திறமையே வெற்றிக்கு வழிவகுத்தது என இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன் நேற்றைய தினம் நடைபெற்ற டுவன்ரி20 போட்டி வெற்றி குறித்து அவர் கருத்து வெளியிடுகையில்…

இந்திய வீரர்களின் செயல்பாடு புத்தசாலித்தனமாக இருந்தது. குறிப்பாக பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். இலங்கை பேட்டிங் வரிசையை திணறடித்து கட்டுப்படுத்தினர். இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசுவது எளிதானதல்ல. ஏனென்றால் பனித்துளி இருந்தது. அவர்கள் கடும் முயற்சி செய்து சிறப்பாக வீசி இருக்கிறார்கள்.

பந்துவீச்சாளர்கள் தங்களது திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்தினார்கள்.

மனிஷ் பாண்டேயும், தினேஷ் கார்த்திக்கும் பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டனர். இது ஒரு முழுமையான கூட்டு முயற்சியாகும் என  ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...