நீங்கள் அதிகளவில் வாழைப்பழம் சாப்பிடுபவரா?

92

வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது என்ற போதிலும் அதிளவில் அதனை உட்கொள்வது பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.

தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வருவது நல்லது. அதில் உடலுக்கு நலம் சேர்க்கும் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதே வேளையில் வாழைப்பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அதிக பட்சம் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று வாழைப்பழம் சாப்பிடலாம்.

குறிப்பாக நீரிழிவு நோயாளிகள், சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் அளவுக்கு மீறி வாழைப்பழம் சாப்பிடுவது எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடும். அதிலும் வாழைப் பழத்தில் உள்ளடங்கி இருக்கும் பொட்டாசியம் சிறுநீரகங்களில் படிந்து உடல் உபாதைகளை உருவாக்கிவிடும்.

அதுபோல் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்துவிடும் என்பதால் நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுபவர்களும் அதிகமாக வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிலிருக்கும் கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரை, கலோரி ஆகியவை கொழுப்பை அதிகரிக்க செய்துவிடும்.

ஒவ்வாமை பிரச்சினையால் அவதிப்படுபவர்களும் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்குள்ளானவர்கள் வாழைப்பழத்தை அளவோடு சாப்பிடுவது நல்லது. அதிலிருக்கும் பொட்டாசியம் இதய நோய் பாதிப்புகளை அதிகரிக்கும் அபாயம் கொண்டது. தலைவலியால் சிரமப்படுபவர்களுக்கும் வாழைப்பழம் உகந்ததல்ல. அதிலிருக்கும் தையமின் தலைவலியை அதிகப்படுத்தி விடும். மேலும் நரம்பு மண்டலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

 

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...