குரங்கணி தீ விபத்தில் காயமடைந்த 9 பேரின் நிலை கவலைக்கிடம்

51

குரங்கணி காட்டுத் தீ விபத்தில் காயமடைந்த 9 பேரின் நிலைக் கவலைக்கிடமாக உள்ளனர்.
இவ்வாறு காயமடைந்தவர்கள் மதுரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 36 பேர் காட்டுத் தீயில் சிக்கினர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடல் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டது.உயிருக்கு போராடிய 27 பேர் மீட்கப்பட்டு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. 14 பேர் மதுரை ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.இதில் சென்னை வேளச்சேரியைச்சேர்ந்த நிஷா (வயது20) நேற்று மாலை உயிரிழந்தார். இதனால் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ. ஏர்ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கோவைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் மதுரை ஆஸ்பத்திரிகளில் 12 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.தீக்காயம் அடைந்து மதுரை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு நேரில் பார்த்தார். அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவக்குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். அவர்களது உறவினர்களிடமும் ஆறுதல் கூறினார்.மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் மருதுபாண்டியனிடம் செல்போனில் பேசினார். தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கும் படி கூறினார்.மேலும் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் உறவினர்களிடமும் மதுரை மாவட்ட நிர்வாகிகள் அழகர், மணி ஆகியோரிடமும் பேசிய கமல்ஹாசன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்படியும் கூறினார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...