அஸ்துமா பிரச்சனயா ???தீர்ப்பதற்கு இதை படியுங்க..

83

மனித வாழ்க்கையுடன் இயற்கை எவ்வாறு பின்னி பிணைந்துள்ளது என்பது வியப்பை ஏற்படுத்துகின்றது. அந்த வகையில் இயற்கையின் அற்புதமான கொடை எவ்வாறு நோய் நிவாரணியாகின்றது என்பதனை எப்.எம். இணைய வாசர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

சிறுவயதில் ஏற்படும் அஸ்துமா (மூச்சுத்தடை) நோய்க்கு சூரிய ஒளி அரிய மருந்தாக அமைகின்றதென ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனது. உயிர்ச்சத்து டி பொதுவாக சூரிய ஒளிலியிருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றது. வெலன்சியன் ஆய்வாளர்களினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் சூரிய ஒளிக்கும் அஸ்துமா நோய்க்கும் இடையிலான தொடர்பு கண்டறியப்பட்டுள்ளது. குளிரான அல்லது ஈரலிப்பான வலயங்களைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் சுவாசப்பையுடன் தொடர்புடைய நோயினால் அதிகம் பீடிக்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகின்றது.

அதிகளவில் சூரிய ஒளி உடலில் பட்டால் புற்று நோயைக் கூட ஏற்படுத்தக் கூடிய ஆபத்து காணப்படுகின்றது. எனினும் முற்று முழுதாக சூரிய ஒளியை நிராகரிப்பதும் ஆபத்துக்களை ஏற்படுத்தும். சூரிய ஒளியினால் ஏற்படும் நன்மை தீமைகளை ஆராய்ந்து சமநிலையாக பேணுவதே புத்திசாதூரியமானது என அஸ்துமா நோய் தொடர்பான முன்னணி ஆய்வாளர் அல்பர்ட்டோ அர்னிடொ பென்னா தெரிவித்துள்ளார்.

மனித உடலுக்கு தேவையான 90 வீதமான உயிர்ச்சத்து டி சூரிய ஒளியின் மூலம் உடலுக்கு கிடைக்கப்பெறுகின்றது. அஸ்துமா நோயாளிகளின் உடலில் உயிர்ச்சத்து டி குறைந்தளவிலேயே காணப்படும். வடக்கு ஸ்பெய்ன் போன்ற குளிரான பிரதேசங்களைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் அஸ்துமா நோயினால் அதிகம் அவதியுறுகின்றனர்.

ஸ்பெய்னின் முக்கியமான ஒன்பது நகரங்களில் 45000 சிறுவர் மற்றும் இளைஞர்களிடம் அஸ்துமா தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு தொடர்பான தரவுகள் சர்வசே பயோமெட்ரியல் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அஸ்துமா நோய் ஏற்படுவதற்கு பிரதான காரணியாக காலநிலை மாற்றத்தை குறிப்பிடுகின்றனர். போதியளவு உயிர்ச்சத்து டி கிடைப்பதற்கு சூரிய ஒளி மிகவும் அவசியமானது. அஸ்துமா, காசம், போன்ற தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த உயிர்ச்சத்து டி மிகவும் இன்றியமையாதது என ஆய்வாளர் அர்னிடொ பென்னா தெரிவித்துள்ளார்.

நாள்தோறும் 20 முதல் 30 நிமிடங்கள் சூரிய ஒளியை பெற்றுக் கொள்வது போதியளவு உயிர்ச்சத்து டி யைப் பெற்றுக்கொள்ள வழிகோலும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

குளிர்காலங்களில் சில நாடுகளில் போதியளவு சூரிய வெளிச்சம் கிடைக்காது. எனவே இவ்வாறானவர்கள் செயற்கை உயிர்ச்சத்து டி பெற்றுக்கொள்ள வேண்டுமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆக்கத்தின் காப்புரிமை, vanavilfm.com இணையத்தளத்திற்கே உண்டு!

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...