சமூக ஊடகங்கள் மீதான தடை வெள்ளிக்கிழமை நீக்கம்?

64

சமூக ஊடகங்கள் மீது இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நீக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
டிஜிட்டல் உட்கட்டுமான அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு, முகப்புத்தகம், வைபர், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசிப்பதை இடைநிறுத்துவதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு கடந்த 7 ஆம் திகதி தீர்மானம் மேற்கொண்டது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...