ரம்மித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து

105

இலங்கையின் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக் வெல்லவின் புதல்வரும், தேசிய கிரிக்கட் வீரருமான ரம்மித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
குடிபோதையில் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் ரம்மித் ரம்புக்வெல்லவின் சாரத அனுமதிப்பத்திரம் தற்காலிக அடிப்படையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரம்புக்வெல்ல இலங்கை தேசிய அணியின் சார்பில் போட்டிகளில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடிபோதையில் வாகனத்தைச் செலுத்தியதாக ரம்புக்வெல்ல மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ரம்மித் ரம்புக்வெல்லவின் கார், மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதுண்டதாகவும், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை ரம்மித் தாக்கியதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டிலும் குடிபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்தியதாக ரம்மித் ரம்புக்வெல்ல மீது குற்றம் சுமத்தி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...