ஆபாச இணைய தளங்களுக்குள் பிரவேசிக்க வயதெல்லை அறிமுகம்!

182

பிரித்தானியாவில் ஆபாச இணைய தளங்களுக்குள் பிரவேசிப்பது குறித்த வயதெல்லை விதி அறிமுகம் செய்வது காலம் தாழ்த்தப்பட உள்ளது.ஆபாச இணைய தளங்களுக்குள் பிரவேசிப்பவர் தனது வயதினை உறுதி செய்யும் வகையிலான பொறிமுறைமை ஒன்றை பிரித்தானியா அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் பிரித்தானியாவில் இந்த சட்டம் அமுல்படுத்தப்படவிருந்தது.எனினும், தற்பொழுது ஏப்ரல் மாதத்தில் இந்த சட்டம் அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது

சரியான விதியை உரிய முறையில் அமுல்படுத்த வேண்டும் எனவும் இதனால் இந்த நடைமுறை காலம் தாழ்த்தப்படுவதாகவும் டிஜிட்டல், கலாச்சாரம் மற்றும் விளையாட்டு திணைக்களம் அறிவித்துள்ளது.பிரித்தானிய திரைப்பட வகையீட்டுச் சபையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.எனினும், இவ்வாறு வயதெல்லை நிர்ணய அடிப்படையில் பயனர்கள் ஆபாச இணைய தளங்களுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட போகின்றார்கள் என்பது பற்றிய பொறி முறைமை இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.
சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது……

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...