10 நிமிடத்தில் சுவையானன மாங்காய் சாதம்

மாங்கோ ரைஸ் ரெசிபி

PREP TIME 20 Mins

COOK TIME 30M

TOTAL TIME 50 Mins

INGREDIENTS

சாதம் – 1 கப்

துருவிய தேங்காய் – 3/4 கப்

எண்ணெய் – தாளிப்பதற்கு

கொத்தமல்லி இலை – 1/2 கப்

வேர்க்கடலை – 1/2 கப்

பச்சை மிளகாய் – 8-10

மாங்காய் – 1

கறிவேப்பிலை – சில கொத்து

பெருங்காயம் – கொஞ்சம்

கடுகு – 1/2 டேபிள் ஸ்பூன்

கடலை பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்

உளுந்தம் பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்

வெந்தயம் – 1/2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் – 1/2 டேபிள் ஸ்பூன்

உப்பு – 1-2 டேபிள் ஸ்பூன் (சுவைக்கேற்ப)

HOW TO PREPARE

ஒரு பெளலை எடுத்து கொள்ளுங்கள்.

அதில் அரிசியை அளந்து எடுத்துக் கொண்டு நன்றாகக் கழுவுங்கள்.

ஒரு பிரஷ்ஷர் குக்கரை எடுத்து கொள்ளுங்கள்.

கழுவிய அரிசியை சேர்த்து 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் என்னும் அளவில் ஊற்றி, மூன்று விசில் வரும்வரை வேகவிடுங்கள்.

பிறகு மூடியை திறந்து 10-15 நிமிடங்கள் வரை ஆற விடவும்.

சாதம் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வர வேண்டுமென்றால் அரிசி வேகவைக்கும்போது ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டுக்கொள்ளலாம்.

ஒரு மாங்காயை எடுத்து நன்றாக துருவிக் கொள்ளுங்கள் வெந்தயத்தை வறுத்து கரகரப்பாக நுணுக்கி வைத்துக் கொள்ளுங்கள் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போன்றவற்றை சேர்த்து வதக்கவும்.

இப்பொழுது வேர்க்கடலையை சேர்த்து லேசாகப் பொன்னிறமாக வறுக்கவும்.

அதில் பச்சை மிளகாய், மஞ்சள் மற்றும் துருவிய தேங்காய் இவைகளை சேர்த்து 1-2 நிமிடங்கள் வரை நன்றாக வதக்கவும் இப்பொழுது வேக வைத்த அரிசியை சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்.

இப்பொழுது துருவிய தேங்காய், கொத்தமல்லி இலைகள் மற்றும் உப்பு இவற்றை மேலே தூவி நன்றாக கலக்கவும் கடைசியாக வெந்தயப் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்.

இதை சூடாக ஒரு பெளலிற்கு மாற்றி தேங்காய் அல்லது கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும்.

நாவிற்கு விருந்தளிக்கும் சுவையான மாங்காய் சாதம் ரெடி.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...