அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் பணி நீக்கம்

61

அமெரிக்க ராஜாங்கச் செயலாளராக கடமையாற்றிய ரெக்ஸ் ரில்லர்சன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் இந்த அதிரடி தீர்மானத்தை எடுத்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய ராஜாங்கச் செயலாளராக சீ.ஐ.ஏவின் பணிப்பாளராக கடமையாற்றிய மைக் பாம்பியோவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ட்ராம்ப் பதவி ஏற்றுக் கொண்டதன் பின்னர் ரில்லர்சன் அமெரிக்க ராஜாங்கச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
ரில்லர்சனின் சேவைக்கு நன்றி பாராட்டுவதாகவும் புதிதாக நியமிக்கப்பட்டவர் சிறந்த முறையில் கடமைகளை முன்னெடுப்பார் எனவும் ட்ராம்ப் தெரிவித்துள்ளார்.
சில முக்கியமான விடயங்களில் கருத்து முரண்பாடு காணப்பட்டதாகவும் இதனால் பதவியிலிருந்து ரில்லர்ஸனை நீக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ரில்லர்சனை தமக்கு மிகவும் பிடிக்கும் எனவும், சில கருத்து முரண்பாடுகளினால் இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...