ஆண்மையை நிரந்தரமாக இழக்கச் செய்ய மருந்து கிடையாது -WHO

79

ஆண்மையை நிரந்தரமாக இழக்கச் செய்யும் வகையிலான மருந்தோ மாத்திரையோ இதுவரை கிடையாது என்றும் அப்படியான ஒன்று புழக்கத்தில் இல்லை என்றும் அது கூறியுள்ளது.ஆகவே உணவில் ஆண்மையை இழக்கச் செய்யும் மருந்து கலந்து கொடுக்கப்பட்டதாக கூறப்படுவது ஆதாரமற்ற தகவல் என்று இலங்கைக்கான உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி டாக்டர். ரஷியா பெண்டஸி ஊடகங்களிடம் தெரிவித்தார்.மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக் கூடிய மருந்துப் பொருட்களை உணவில் கலந்து வழங்குவதாகத் தெரிவித்து, அம்பாறையில் முஸ்லிம் ஹோட்டல் ஒன்றின் மீது ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்த தாக்குதல்களின் எதிரொலியாகவே பின்னர் கண்டி உள்ளிட்ட ஏனைய பகுதிகளிலும் வன்முறைகள் வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.அம்பாறையில் இது தொடர்பாக நடந்த தாக்குதலில் குறைந்தபட்சம் ஐந்து பேராவது காயமடைந்ததுடன், பல சொத்துக்களும் சேதமாக்கப்பட்டன.அந்த தாக்குதலை கண்டித்துள்ள முஸ்லிம் அமைப்புக்கள் பலவற்றை உள்ளடக்கிய முஸ்லிம் கவுன்ஸில் இது குறித்து கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...