கேரளாவில் ஆழ் கடலில் மீன்பிடிக்கச் சென்ற 400 பேர் காணவில்லை

51

கேரளாவில் ஆழ் கடலில் மீன்பிடிக்கச் சென்ற 400 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

கேரளாவில் கொச்சி, விழிஞ்ஞம், கோவளம் போன்ற பகுதிகளில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 400-க்கும் மேற்பட்ட மீனவர்களை தேடும்பணி முடுக்கி விடப்பட்டுள்ளது

புயல் காரணமாக கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் கடல் பகுதியிலும் பலத்த காற்று வீசுகிறது. இதைதொடர்ந்து 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

முதல்-மந்திரி பினராயி விஜயனும் மழை முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.அதன்படி மாவட்ட கலெக்டர்களும் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். கலெக்டர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை உள்பட அனைத்து துறை அரசு அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.

கேரளாவின் கொச்சி, விழிஞ்ஞம், சிறையின்கீழ், சங்குமுகம், கோவளம் போன்ற பகுதிகளில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 41 விசைப்படகுகள் இன்னும் கரைக்கு திரும்பவில்லை. இந்த படகுகளில் 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர்.

இதனால் அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மாயமான மீனவர்களை தேடி கண்டு பிடித்து மீட்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...