அமிதாப்பின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது

35

பிரபல இந்தி நடிகர் அபிதாப் பச்சானின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நடிகர் அமிதாப்பச்சன், நேற்று காலை, ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் ‘தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்’ இந்திப்படத்தின் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தார். போர்க்கள காட்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த அவர், தனது வலது தோள்பட்டை கடுமையாக வலிப்பதாக கூறினார். உடனடியாக, அவர் தங்கி இருந்த ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அவருடைய தனி டாக்டர்கள் 3 பேர், மும்பையில் இருந்து விசேஷ விமானத்தில் ஜெய்ப்பூருக்கு விரைந்தனர். அவர்கள் அமிதாப் பச்சனுக்கு சிகிச்சை அளித்தனர். இதையடுத்து, தோள்பட்டை வலியில் இருந்து அமிதாப்பச்சன் விடுபட்டார்.

அவரது உடல்நிலை, மருத்துவ ரீதியாக தகுதியாக இருப்பதாக டாக்டர்கள் அறிவித்தனர். உடல்நிலை முன்னேறி வந்தாலும், அமிதாப் பச்சன் முறையாக ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...