சில சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம்?

71

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டிருந்த சமூக ஊடகங்கள் மீதான தடை தளர்த்தப்பட்டுள்ளது.அண்மைய நாட்களாக தடை செய்யப்பட்டிருந்த வைபர் தற்பொழுதுமுழு அளவில் செயற்படுத்தப்பட்டுள்ளதுடன், வட்ஸ்அப்பும் இயங்கத் தொடங்கியுள்ளது.சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம் பற்றி அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.எவ்வாறெனினும் விரைவில் சமூக ஊடகங்கள் மீதான தடை முழு அளவில் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்டியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் காரணமாக சமூக ஊடக வலையமைப்புக்கள் மீது தடை விதிக்கப்பட்டிருந்தது, சமூக ஊடக வலையமைப்பு பயன்பாட்டு தடை நீக்குதல் குறித்த செய்திகளை எப்.எம். தமிழ் உடனுக்குடன் வழங்கத் தயாராக உள்ளது.இதேவேளை, இலங்கையில் சுமார் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் முகநூலை பயன்படுத்தி வருவதாக டிஜிட்டல் உட்கட்டுமான அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மீது தடை விதிக்கப்பட்டதனைத் தொடாந்து வீ.பி.என் என்னும் மொபைல் அப்ளிசேனை மாற்று வழியாகப் பயன்படுத்தி பலர் இந்த சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அண்மைய நாட்களில் சுமார் எட்டு லட்சம் பேர் இவ்வாறு வி.பி.என் ஐ தரவிறக்கம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...