பாலியல் தொல்லைகளை இவ்வாறு தடுக்கலாம் – இலியானா

69

பாலியல் தொல்லைகளை இவ்வாறு தடுக்கலாம் நடிகை இலியானா தெரிவித்துள்ளார்.
துணிவுடன் வெளியே செல்வதன் மூலம் பாலயல் தொல்களை எதிர்க்கவும் தடுக்கவும் முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பது உண்மைதான். வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைக்கிறார்கள்.

பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து நடிகைகள் வெளியே சொன்னால் அவர்கள் சினிமா வாழ்க்கையே முடிந்து விடும். இது கோழைத்தனமாக தெரிந்தாலும் அதுதான் உண்மை. சில ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய மொழி படங்களில் நடித்த இளம் நடிகையை ஒரு பெரிய தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்தார். அவரை எப்படி சமாளிப்பது என்று அந்த நடிகை என்னிடம் ஆலோசனை கேட்டார்.

நீங்கள் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை நான் சொல்லக் கூடாது என்று கூறிவிட்டேன். ஒருவருக்காக இன்னொருவர் முடிவுகள் எடுக்க முடியாது. எனது முடிவை அந்த பெண் மீது திணிக்க முடியாது. தயாரிப்பாளர் ஆசைக்கு இணங்குவதா? இல்லையா? என்பதை அந்த இளம் நடிகைதான் முடிவு செய்ய வேண்டும்.

செக்ஸ் தொல்லைகளை துணிச்சலாக வெளியே சொல்வதன் மூலம்தான் இதை தடுக்க முடியும்.”

இவ்வாறு இலியானா கூறினார்

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...