சூடான யாழ்ப்பாண மிளகாய்த் தூள் செய்வதெப்படி???

வணக்கம் , வந்தனம் மக்களே… வாங்கோ..வாங்கோ..நம்ம வானவில் எப்.எம் செய்திகளைப் படிக்க வாங்கோ, அப்படியே மறக்காமல், Email Subscription ஐயும் க்ளிக் செய்திடுங்கோ. நம்ம செய்திகள் பிடித்தால் நண்பர்கள் உறவினர்கள், சொந்தங்கள் எல்லோருக்கும் அறிமுகப்படுத்துங்கள். இன்னைக்கு நம்ம வானவில் எப்.எம் செய்திப் பக்கத்தில் சுவையூட்டும் யாழ்ப்பாண மிளகாய் தூள் செய்வது எப்படி என்று அறிவோமா? புலம் பெயர் தேசத்தில் பலரும் இலங்கை – இந்திய மளிகைக் கடைக்கு ஓடியோடி – தேடித் தேடி யாழ்ப்பாண மிளகாய்த் தூள் வாங்குவீர்கள்.. ஆனால் மிகச் சுலபமாக வீட்டிலே தயாரிக்கலாம். அட என்ன ஆச்சரியமாக இருக்கா?


‘இல்லத் தரசிகளுக்கும், மனைவிமாரைக் கண் கலங்காமல் காலம் பூராவும் வைச்சுக் காப்பாற்றுவேன் எனும் சபதத்தோடு இருக்கும் நண்பர்களுக்கும்(வெங்காயம் நறுக்க விடாமல்- தாங்களே மனைவிக்கும் சேர்த்து சமைக்கும் கடமை உணர்வு உள்ள நண்பர்கள்), மற்றும் புலம் பெயர் தேசங்களில் – தனித்திருக்கும் ஜீவன்களுக்கும், மற்றும் பலருக்கும்…… இந்தக் குறிப்பு கண்டிப்பாக உபயோகமாகும் எனும் நம்பிக்கையில் Star Music!!

நம் வானவில் எப்.எம் இன் ஈழத்துச் சுவையருவிக்குள் இறங்குவோமா…

இலங்கை உணவுகளை, கம கம வாசனையுடன் நீங்கள் கறி காய்ச்சி/ கறி ஆக்கி உண்ண வேண்டும் என்றால் உங்களுக்குத் தேவையான, மிக முக்கியமான ஒரு ’திங்ஸ்’ தான் மிளகாய்த் தூள். என்னுடைய சமையற் குறிப்புக்களில் ஈழத்துக் கலாச்சார உணவு வகைகளை மட்டுமே உங்களுக்காய் நான் இங்கே பகிர்ந்து கொள்வதால் நீங்கள் இந்த மிளகாய்த் தூள் இல்லாமல் சமையலில் இறங்க முடியாது. அப்போ கண்டிப்பாக, முதல் முயற்சியாக மிளகாய்த் தூள் அரைக்கும் முயற்சியில் இறங்குங்கள்.  இந்த Recipes இனைப் பின் பற்றி மிளகாய் தூளைத் தயாரித்துக் கொள்ளலாம், இல்லை என்றால் உங்கள் உறவினர்களிடம் சொல்லி, பார்சல் மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.


இனி மிளகாய்த் தூள் எப்படி அரைப்பது என்று பார்ப்போமா?

தேவையான பொருட்கள்:

1kg செத்தல் மிளகாய்(Dry Red chilli)
1/2kg மல்லி
1/4kg கிலோ பெருஞ் சீரகம்/ பெரிய சோம்பு

150g சின்னச் சோம்பு/ சிறு சீரகம்

100g மிளகு

கறி வேப்பிலை – உங்கள் விருப்பத்திற்கேற்ற வாறு தேவையான அளவு

50g கராம்பு

25g கறுவாப் பட்டை

100g ஏலக்காய்

10g அன்னாசிப் பூ( சிறிய கையளவு)

10g ஜாதிபத்தினி

25g மஞ்சள் கட்டை

மேற் கூறப்பட்டுள்ள பொருட்களைக் கொண்டு, எப்படி மிளகாய்த் தூளைத் தயாரிப்பது என்று பார்ப்போம்.

*மஞ்சள் கட்டையினைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

*செத்தல் மிளகாயினையும் இரண்டாக வெட்டிக் கொள்ளுங்கள்

*வானலியில்/ அடுப்பில் ஒரு இரும்புச் சட்டியினை வைத்துச் சூடாக்கத் தொடங்குங்கள்

*சூடான சட்டியினுள் மல்லி, கறி வேப்பிலை, மிளகு, நறுக்கிய மஞ்சள் கட்டைகள் முதலியவற்றை ஒன்றாகக் கொட்டிச் சூடாக்கவும்/ வறுக்கவும்.

*மல்லியானது வெடிக்கும் பருவத்தில் இறக்கவும்.

* இதன் பின்னர், ஏனைய பொருட்களைத் தனித் தனியாகச் சூடாக்கவும்.

* பின்னர் மிளகாயை மட்டும் தனியாக, லேசான தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து வறுக்கவும். 1kg மிளகாய்க்கு, இரண்டு சிறிய தேக் கரண்டி(Small tea spoon) தேங்காய் எண்ணையினைச் சேர்க்கவும்.


*மிளகாய் வறுத்து முடிந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். மிளகாயில் உள்ள சூடு ஆறியதும் எல்லா வகையான பொருட்களையும், ஒன்றாகக் கலந்து/ மிக்ஸ் பண்ணி ஒரு அரைக்கும் ஆலை அல்லது மில்லில் கொடுத்து அரைக்கவும்.

*மில்லில் அரைத்ததும் உங்களுக்கு, கம, கமவென வாசனை வீசும் மிளகாய் தூள் கிடைக்கும், அதனை வீட்டிற்கு கொண்டு வந்து, பேப்பரில் கொட்டி, ஆற விடவும். பின்னர் போத்தலில் அடைத்து, உங்கள் சமையற் தேவைக்கேற்றாற் போல யூஸ் பண்ணத் தொடங்கலாம்….

*ஒரே, ஒரு கண்டிப்பான விசயம் என்ன என்றால், மிளகாயினைக் கருக்காது, பதமாகும் வரை வறுக்கவும். மிளகாய் கருக்கினால் நறு மணம் வீசாது, நாற்றம் தான் அடிக்கும்….

இனி எனது அடுத்தடுத்த பதிவுகளில் இந்தக் கம, கம என வாசமடிக்கும் இலங்கை மிளகாய்த் தூளின் துணையோடு, சுவையான கோழிக் கறி, ஆட்டிறைச்சிக் கறி, உருளைக் கிழங்குப் பிரட்டல், கத்தரிக்காய் வற்றல், இறால் கறி, மரக்கறி கூழ், மாமிசக் கூழ், கோழிப் பொங்கல், முதலிய பல வகையான, வாயில் நாவூற வைக்கும் உணவுகளைச் சமைப்பது எப்படி என்பதனையும் பகிர்ந்து கொள்கிறேன். அதுவரைக்கும் மறக்காது நம்ம வானவில் எப்.எம் கேளுங்க..  இந்த மிளகாய்த் தூள் கொஞ்சம் காரம் கூடியது, வீட்டிற்குத் திருடன் வந்தாலோ அல்லது, வீட்டில் யாருடனும் சண்டை என்றாலோ இதனை நீங்கள் ஒரு தற் காப்பு ஆயுதமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


வந்தது தான் வந்தீங்க. அப்படியே செய்தியைப் படிச்சதோட, எஸ் ஆகிடாதீங்க. மறக்காம Vanavilfm.com வாருங்கள். 24 மணி நேரமும் உங்கள் விருப்ப பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்..அட என்னங்க அப்படிப் பார்க்கிறீங்க. ஆமாங்க 24 மணி நேரமும் நம் வானவில் எப்.எம் இல் உங்கள் விருப்ப பாடல்கள்.. மிக வித்தியாசமான ஒலித் தரத்தில், ஒரு தடவை கேட்டுப் பாருங்க மறக்காமல். தமிழில் தரமான ஒரு வலையலை. “கேட்டுப் பாருங்க, நம்ம ஸ்டயில!!”
மீண்டும் சந்திக்கலாம், உங்கள் அன்புத் தோழன்!!

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...