பின்லாந்து மக்களே உலகில் அதிகளவு மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்

60

உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறிக்கையின் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
உலகின் மிகவும் சந்தோசமான நாடாக பின்லாந்து இந்த ஆண்டு தர வரிசையின் அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு உலகின் மகி;ழ்ச்சியான நாடுகளின் வரிசையில் நோர்வே முதலிடத்தை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நோர்டிக் நாடுகளே இந்த தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
யுத்தம் இடம்பெறும் நாடுகள், ஆபிரிக்க நாடுகள் என்பன இந்த தர வரிசையின் இறுதி ஐந்து இடங்களை பெற்றுக் கொள்வது வழமையானதாகும்.
உலகின் மிகவும் மகிழ்ச்சியற்ற நாடாக புரூண்டி காணப்படுகின்றது.
இந்த ஆண்டு தர வரிசையில் முதல் இடத்தை பின்லாந்தும், இரண்டாம் இடத்தை நோர்வேயும், மூன்றாம் இடத்தை டென்மார்க்கும் பெற்றுக்கொண்டுள்ளன.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...