ஆபிரிக்காவின் அற்புதப் பூங்கா

209

உலக இயக்கத்திற்கு இயற்கையின் சமநிலைத் தன்மை மிகவும் இன்றியமையா ஏதுவாக அமைகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சி, நகரீக மேம்பாடு மற்றும் கால மாற்றத்தினால் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான இடைவெளி சற்றே நீண்டு செல்கின்றது என்பது மறுக்கப்பட முடியாத யதார்த்தமாகும்.
எனினும் உலகின் சில பகுதியில் இயற்கையின் அற்புதங்கள் மனித குலத்தை பிரமிப்பூட்டும் வகையில் அமையப் பெற்றுள்ளது. அவ்வாறு அமைந்துள்ள ஓர் அரிய வனப் பிரதேசமே நமீபிய பூங்காவாகும்.


1990ம் ஆண்டு சுதந்திரம் பெற்றுக் கொண்டது முதல நாட்டின் இயற்கை வளப்பாதுகாப்பு தொடர்பில் நமீபியா கூடுதல் சிரத்தை காட்டி வருகின்றது. வனவளப்பாதுகாப்பு தொடர்பில் நமீபியாவின் அரசியல் சாசனத்தில் விசேட சட்ட மூலமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.தற்போது நாட்டின் அரைவாசிப் பகுதி நிலம் இந்த வனப் பகுதிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.வைகறைப் பொழுதில் பூங்காவின் மணற் குன்றுகளில் சூரிய ஒளி விழும் காட்சியைக் காண்பது மனங்களில் உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

நாமீப் நுக்லுப்ட் பூங்காவின் மற்றுமொரு அரிய காட்சியாக சோசுஸ்வெலி பிரதேசம் கருதப்படுகின்றது. உப்பு நீர் செறிந்த மணத் திட்டுக்களினால் உருவான இந்தப் பகுதியை பாலை வனம் என்பதனை விடவும் இயற்கையின் அற்புத கொடையாகவே காண்பவர்கள் கருதுகின்றனர்.நாமீப் நுக்லுப்ட் வனப் பகுதியில் கழுதைப் புலிகள் அதிகளவில் காணப்படுகின்றன. ஆபிரிக்காவில் மொத்தமாக 8000 கழுதைப் புலிகள் காணப்படுவதாகவும் இதில் 1200 கழுதைப் புலிகள் நமீபியாவில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.நமீபியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள் கேப் க்ரோஸ் பாதுகாக்கப்பட்ட பூமி பெருமளவிலான நீர் நாய்களின் இருப்பிடமாக அமைந்துள்ளது.
நமீபியாவின் சாண்ட்விட்ச் துறைமுகம் பண்டைய காலத்தில் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பிரசித்தி பெற்றிருந்த போதிலும் தற்போது பறவைகளின் சரணாலயமாகவே பிரபல்யம் பெற்றுள்ளது. சுமார் நூற்றுக் கணக்கான அரிய பறவையினங்களின் இருப்பிடமாக சாணட்விட்ச் துறைமுகப் பிரதேசம் கருதப்படுகின்றது.
பாலை வனத்தில் காணப்படும் குய்வர் மரங்கள் பறவைகளுக்கும், ஏனைய விலங்கினங்களுக்கும் பல்வேறு வழிகளில் உதவியாக அமைந்துள்ளன.
பழமையான ஹ_வாப் நதிக்கு அருகாமையில் காட்டு யானைகளை பார்க்க முடியும்.

ஸ்பெர்ஜிபிட் வனாந்திரப் பகுதி உயிர்ப் பல்வகைமையின் கேந்திர நிலையங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.கழுதைப் புலிகள், நீர் நாய்கள், பாம்பு வகைகள் மற்றும் 800 வகையான தாவரங்கள் இந்தப் பிரதேசத்தில் காணப்படுகின்றன. இவற்றில் 234 தாவர வகைகள் குறித்த பிரதேசத்திற்கு மட்டுமே உரித்தானவை என்பது குறிப்பிடத்தக்கது.ஹலிபாக்ஸ் தீவுப் பகுதிகளில் ஆபிரிக்க பென்குயின் பறவைகளை அதிகமாக பார்க்க முடியும்.நமீபியாவில் உலகின் மிக உயர்ந்த மணற்குன்றுகள் காணப்படுகின்றமை இந்த இயற்கை பூமியின் தனித்துவத்தை மேலும் மிளிரச் செய்கின்றது.நமீபிய இயற்கை சூழல் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வாழ்வதற்கு மிகவும் உசிதமானதாகக் காணப்படுகின்றது

 

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...