மிகவும் அநாகரீகமாக வெற்றியை கொண்டாடிய பங்களாதேஸ் அணி

85

இலங்கை அணிக்கு எதிரான டுவன்ரி20 போட்டியின் வெற்றியை மிகவும் அநாகரீகமான முறையில் பங்களாதேஸ் அணி வெற்றியை கொண்டாடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற ஆறாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 2 விக்கட்களால் வெற்றி பெற்றது.

நேற்று (17) நடைபெற்ற போட்டியில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்டன. போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்றது.

160 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19.5 ஓவர்களில் 8 விக்கட்களை இழந்து 160 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.

பங்களாதேஷ் அணி இந்த போட்டியில் வெற்றியீட்டியதை தொடர்ந்து இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இதனையடுத்து பங்களாதேஷ் வீரர்கள் தமது வெற்றியை கொண்டாடிய வேளை அவர்கள் தங்கியிருந்த ஓய்வு அறை சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க்படுகின்றது.

ஆர்.பிரேமதாச மைதானத்தில் பங்களாதேஷ் வீரர்கள் தங்கியிருந்த ஓய்வு அறையின் கண்ணாடியிலான கதவுகளே இவ்வாறு முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளது

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...