வேற்றுக்கிரக நுண்ணங்கிகள் காணப்படுகின்றன ?

61

ஈர்ப்பு விசையை எதிர்த்து போராடும் வல்லமை நுன்னங்கிகளிடம் அதிகமாகக் காண்படுகின்றது

ஈர்ப்பு விசயை எதிர்த்து போராடும் வல்லமை நுன்னங்கிகளுக்கு அதிகமாகக் காணப்படுவதாக புதிய ஆய்வுத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அநேகமான மனிதர்களினால், புவியீர்ப்பு விசையை விடவும் நான்கு ஐந்து மடங்கு ஈர்ப்பு விசையையே மட்டுமே தாங்கிக்கொள்ள முடியும்.

பாரிய நட்சத்திரங்கள், பாரிய பிரபஞ்ச சூழலில் அதீதமான ஈர்ப்பு விசைக் காணப்படும் என கடல், புவியியல் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜப்பானிய ஆய்வு மையத்தின் தலைவர் சீகிரு டெக்குகூச்சீ தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலைகளில் புவியிர்ப்பு விசையைக் காட்டிலும் சுமார் 400000 மடங்கு அதிகமான ஈர்ப்பு விசை காணப்படும்.

அல்ட்ராசென்ட்ரிபியூக் என்ற கருவியின் மூலம் ஈர்ப்பு விசையை தாங்கிக் கொள்ளக் கூடிய ஆற்றல் தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

நான்கு வகை பக்றீயாக்களின் மீது கடுமையான ஈர்ப்பு விசையைப் பிரயோகித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கிரமமாக ஈர்ப்பு விசையை அதிகரிப்பதன் மூலம் நுன்னங்கிகளின் தாங்கும் திறன் பரீட்சீக்கப்பட்டுள்ளது.

புவியீர்ப்பு விசையை விடவும் ஆயிரம் பல்லாயிரம் மடங்கு ஈர்ப்பு விசை பிரயோகிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

அதீதமான ஈர்ப்பு விசை நிலைமைகளின் போது அங்கிகளின் அளவு

அதிதமான ஈர்ப்பு விசையை தாங்கிக் கொள்ளும் திறன் நுன்னங்கிகளிடம் காணப்படுவதாக சீகிரு டெக்குகூச்சீ குறிப்பிட்டுள்ளார்.

பல கலன்களைக் கொண்ட மனிதர்கள் போன்ற பெரிய உருவங்களைக் கொண்ட விலங்கினங்களினால் கடுமையான ஈர்ப்பு விசையை தாங்கிக்கொள்ள முடியவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதீதமான ஈர்ப்பு விசை நிலைமைகளை தாங்கிக் கொள்ளக் கூடிய ஆற்றல் பக்றீயாக்களுக்கு காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

பக்றீயாக்களுக்கு மனிதர்களைப் போன்று கலன்கள் காணப்படுவதில்லை, பக்றீயாக்களின் கலன்களுக்கு ஈர்ப்பு விசையை சகித்துக்கொள்ளக் கூடிய வல்லமை அதிகம் காணப்படுகின்றது.

வேற்றுக்கிரக நுன்னங்கிகள் காணப்படுகின்றன ?

வேற்றுக் கிரகங்களில் நுன்னங்கிகள் வாழக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், இதனை பான்ஸ்பார்மியா கொள்கையின் மூலம் விபரிக்க முடியும் எனவும் டெக்குகூச்சீ தெரிவித்துள்ளார்.

பண்டைய காலத்தில் வேற்றுக்கிரக நுன்னங்கிகளின் வருகையினால் பூமியில் உயிரினங்கள் உருவாகியிருக்கலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், பூமியைத் தவிர வேறு கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இதுவரையில் சமர்ப்பிக்கப்படவிலi;ல என டெக்குகூச்சீ சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறெனினும், சூரிய குடும்பத்திற்கு அப்பால் உயிரினங்கள் காணப்பட்டால் அது முன்னர் கருதப்பட்டதனை விடவும் அதிகளவான இடங்களில் காணப்படலாம் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...