இறுதிப் பந்தில் சிக்ஸர் அடித்து கார்த்திக் சாதனை

78

வங்காளதேசத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் அவர் கடைசி பந்தில் அடித்த சிக்சரால் நாடே பெருமிதம் கொள்கிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்த வரலாற்று சாதனையை தினேஷ் கார்த்திக் நிகழ்த்தியுள்ளார். சர்வதேச அணியில் இது 5-வது நிகழ்வாகும்.
பிரேமதாசா மைதானத்தில் தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு வெற்றி தேடி தந்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்தார்.
32 வயதான அவர் 8 பந்தில் 29 ரன் எடுத்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார். பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-
அதிரடியாக ஆடியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய அணிக்காக மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த தொடரில் நாங்கள் உண்மையிலேயே நன்றாக ஆடினோம். எனவே இந்த போட்டியில் வெல்லாமல் போயிருந்தால் அது துரதிருஷ்டம்தான்.
இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது எளிதாக அமைந்தது இல்லை. முஸ்டா பிசுர் வீசிய விதத்தை வைத்து நான் அதிரடியாக ஆட வேண்டிய நிலை ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...