கேம் விளையாட தடை போட்ட அக்காவை கொன்ற 9 வயது தம்பி
அமெரிக்காவில் வீடியோ கேம் விளையாடுவதற்கு தடை போட்ட அக்காவை, 9 வயதான தம்பியொருவர் துப்பாக்கியினால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் இந்த கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் மிஸ்சிஸ்சிப்பி மாநிலத்தில் உள்ள மோன்ரே கவுண்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. நேற்று மதியம் டிஜோனே ஒயிட் (13) என்பவர் வீடியோ கேம் விளையாட அனுமதிக்காததால் அவரது 9 வயது தம்பி துப்பாக்கியால் அக்காவை தலையில் சுட்டுள்ளான்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒயிட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள நகர போலீசார், சிறுவன் கைக்கு துப்பாக்கி எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.