கொலஸ்டராலை குறைப்பதற்கு எளிமையான வீட்டு மருந்து

கொலஸ்டராலை குறைப்பதற்கு எளிமையான வீட்டு மருந்து ஒன்றை நீங்களும் தயாரித்துக் கொள்ள முடியும், இதனை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் உடலில் காணப்படும் கெட்ட கொழுப்பை அகற்றலாம்.

பேரிச்சம்பழம் மற்றும் இஞ்சியைக் கொண்டு இந்த மருந்தை தயாரித்துக் கொள்ள முடியும்.பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் கொழுப்புக்களை கரைத்துவிடும்.இஞ்சியில் உள்ள மருத்துவ குணத்தால், கொலஸ்ட்ரால் அளவு வேகமாக குறையும். ஏனெனில் இதில் உள்ள குறிப்பிட்ட அமிலம் உடலில் தேங்கும் அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் கரைத்துவிடும்.

விதை இல்லாத பேரிச்சம் பழம் – 3-4

இஞ்சி சாறு- 2 டீஸ்பூன்

முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

தயாரித்து வைத்துள்ள கலவையை தினமும் இரவில் உணவு உட்கொண்ட பின் சாப்பிட வேண்டும். இப்படி 2 மாதத்திற்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் முழுமையாக கரைந்துவிடும்.

இந்த இயற்கை மருந்தை தொடர்ந்து உட்கொண்டு, அதோடு சரியான டயட் மற்றும் உடற்பயிற்சியை செய்து வந்தால், அதிகப்படியான கொஸ்ட்ரால் குறையும். முக்கியமாக இந்த மருந்தை உட்கொண்டு வரும் போது, உணவுகளில் எண்ணெய் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டியது முக்கியமானதாகும்…

 

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...