புலிகளின் தங்கத்தை மீட்கும் பணி இடைநிறுத்தம்

61

தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தங்கத்தை மீட்கும் அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடத்தில் தங்கம் தேடி தோண்டும் நடவடிக்கை ஒன்று நேற்று (20) மாலை முன்னெடுக்கப்பட்டு முடிவுறாத நிலையில் திகதி குறிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப்புலிகளால் நிலத்தடி அகழியில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இடத்தில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனிஸ்குமார் முன்னிலையில் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போர் நடைபெற்ற காலத்தில் குறித்த தனியார் காணியில் விடுதலைப்புலிகளின் முகாம் ஒன்று காணப்பட்டுள்ளது என்றும் அதன்படி நிலத்தின் கீழ் பாரிய பதுங்கு குழி ஒன்று அமைத்து அதில் பெறுமதியான நகைகள் புதைத்து வைத்துள்ளதாகவும் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகலை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிஸார் நீதிமன்றில் குறித்த பகுதியினை தோண்டுவதற்கான அனுமதியினை கோரியுள்ளார்கள்.

இந்நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸார், நீதிபதி, அரச அதிகாரி, படை அதிகாரி, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் நேற்று (20) பிற்பகல் 2.00 மணிதொடக்கம் 4.00 மணிவரை கனரக இயந்திரம் கொண்டு தோண்டியவேளை நேரம் போதாத காரணத்தால் குறித்த தோண்டும் நடவடிக்கையினை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார். அதுவரையும் குறித்த பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...