மூளையை வலுவாக்கும் புதிய வகைப் புரதப்பொருள்

54

உடல் உறுப்புக்கள் அனைத்துமே மிகவும் இன்றிமையானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்ற போதிலும், சில வகை உறுப்புகள் மிகவும் முதன்மையானவை என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும். இந்த அடிப்படையில் மனிதனின் மூளைக்கு மிகவும் முக்கியமான இடம் வழங்கப்படுகின்றது.மூளையை ஆரோக்கியமாகப் பேணுவதற்கும் வலுப்படுத்துவதற்கும் உதவக் கூடிய புதிய வகைப் புரதப் பொருள் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.விஞ்ஞானி ஜோன் ஹோப்கின்ஸ் தலைமையிலான ஆய்வாளர்கள் இந்த புதிய வகைப் புரதத்தை கண்டு பிடித்துள்ளனர்.மூளைக் கலன்கள் செயலிழப்பதனால் பக்கவாதம் ஏற்படுவதாகவும், கலன்களை வலுப்படுத்தக் கூடிய புதிய புரதப் பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

நீரிழிவு மற்றும் மாரடைப்பு ஆகிய நோய்களுக்கும் மூளையின் கலன்கள் செயழிலத்தல் ஏதுவாக அமைகின்றது.எலிகளிடம் நடத்திய ஆய்வின் மூலம் இந்த புதிய வகை புரதப் பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.மூளைத் திசுக்கள் அழுத்தங்களை எதிர்நோக்கும் போது கலன்களினால் அவை பாதுகாக்கப்படுவதாகவும், கலன்களை புரதப் பொருளொன்று பாதுகாப்பதாகவும் ஆய்வாளர் ஜோன் ஹோப்கின்ஸ் தலைமையிலான ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த புதிய வகைப் புரதப் பொருளுக்கு இடுனா எனப் பெயரிடப்பட்டுள்ளது.நோர்வே நாட்டின் பெண் காவல் தெய்வமொன்றின் பெயர் இந்த புரதப் பொருளுக்கு சூட்டப்பட்டுள்ளது. இடுனா தெய்வம் தெய்வங்களையே பாதுகாக்கும் ஓர் காவல் தெய்வமாக வர்ணிக்கப்படுகின்றது.எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் போது இடுனா புரதத்தின் மூலம் எலிகளின் மூளைத் திசுக்கள் வலுவடைந்தமை நிரூபணமாகியுள்ளது.மூளைச் கலன்கள் செயழிலப்பனை தடுப்பது மட்டுமன்றி மேலதிக பாதுகாப்பினையும் வழங்குவதகாக நரம்பியல் நிபுணர் வெலினா டொவ்சன் தெரிவித்துள்ளார்.

இந்தப் புரதப் பொருள் கலன்களை 72 மணித்தியாலங்கள் வரையில் பாதுகாப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.பக்கவாதம், மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோய்களின் போது மூளையின் சில வகை கலன்கள் செயலிழக்கின்றன. இடுனா புரதப் பொருள் மூளைக் கலன்கள் செயலிழப்பதனை தடுக்கின்றன.எலிகளிடம் நடத்திய ஆய்வின் போது இடுனா புரதப் பொருள் காணப்பட்ட கலன்கள் செயலிழக்கவில்லை எனவும், ஏனைய கலன்கள் செயலிழந்திருந்தமையும் கண்டறியப்பட்டது.சாதாரண எலிகளை விடவும், இடுனா புரதப்பொருள் அதிகமாகக் காணப்படும் மரபு ரீதியான செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட எலிகளின் மூளைக் கலன் செயலிழப்பு வீதம் குறைவாகக்காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.மூளைத் திசுக்கள் ஆரோக்கியமாகக் காணப்பட்டால் பக்கவாத ஆபத்து வெகுவாகக் குறைவடையும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இந்தக் கண்டு பிடிப்புக்களின் மூலம் எதிர்காலத்தில் மூளைக் கலன் செயற்பாடு தொடர்பில் பல்வேறு தரவுகளை வெளியிட முடியும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...